கடந்த 2019 ஆம் ஆண்டு சேலம் மாவட்டத்தில் உள்ள கவுண்டம்பாளையம் பகுதியில் மிகப் பிரமாண்ட முறையில் முத்துமலை முருகன் சிலை அமைக்கும் பணி துவங்கியது.
தமிழகத்திலுள்ள பிரசித்தி பெற்ற திருக்கோயில்களில் மண்ணை எடுத்துவந்து இத்திருக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது.
மலேசியாவில் உள்ள முருகன் கோயிலை வடிவமைத்த தியாகராஜர் ஸ்தபதி மூலம் இந்த திருக்கோயில் கட்டப்பட்டுள்ளது.
சுமார் 3 கோடி ரூபாய் செலவில், 146 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட இந்த முருகன் சிலைக்கு அருகில் ஒரு லிஃப்ட் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பக்தர்கள் மேலேறி வந்து முருகன் கையில் உள்ள வேலுக்கு பால் ஊற்றி அபிஷேகம் செய்யலாம்.
ஒரே நேரத்தில் 5 லட்சம் பேருக்கு தரிசனம் வழங்கும் விதமாக இக்கோவில் அமைக்கப்பட்டுள்ளது. சுவாமியின் திருமேனியில் தங்ககவசம் சாற்றப்பட்டுள்ளது. சுவாமி பஞ்சவர்ண நிறத்தில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.
மலேசியாவில் உள்ள முருகன் சிலை 140 அடி உயரத்தில் உள்ளது. தற்போது சேலத்தில் உள்ள முருகன் சிலை 146 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக உலகின் மிக உயர்ந்த முருகன் சிலை என்ற சாதனை படைத்துள்ளது.