சால்மன் மீன் சாப்பிடுவது உடலுக்கு நல்லதா?

சால்மன் மீன் இளஞ்சிவப்பு, ஆரஞ்சு சதையுடன் கூடிய செழுமையான சுவை கொண்டது. சால்மன் மீன்களில் வைட்டமின் டி அதிக அளவில் இருக்கிறது. இதில் ஒமேகா – 3 அதிகம் உள்ளதால் இதை உண்பவர்களுக்கு பல நன்மைகளை அளிக்கிறது.

எலும்பு ஆரோக்கியம்

சால்மன் மீனில் வைட்டமின் டி உள்ளது. இது ஆரோக்கியமான எலும்புகளை பராமரிக்க உதவும். இது பலவீனமாக இருக்கும் எலும்புகளை பாதுகாக்கும்.

முடி ஆரோக்கியம்

சால்மன் மீனில் உள்ள புரதம் மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் தோல் மற்றும் முடி ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இது சருமத்தில் தோன்றும் சுருக்கங்களின் குறைக்கவும், சருமத்தில் வரும் இறந்த செல்களின் சேதத்திற்கு எதிராக பாதுகாக்கவும் உதவும்.

ஊட்டச்சத்து

சால்மன் மீன் பொது ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. குறிப்பாக இதன் ஊட்டச்சத்து பட்டியலில் பி வைட்டமின்கள், பொட்டாசியம் மற்றும் துத்தநாகம் ஆகியவை உள்ளது.

இதய ஆரோக்கியம்

சால்மன் மீன்களில் அதிகம் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், இரத்த அழுத்தத்தைக் குறைத்து, கொலஸ்ட்ரால் அளவை மேம்படுத்தும். இந்த மீன்கள் இருதய நோய் அபாயத்தை குறைக்க பெரிதும் உதவும்.

Recent Post