Connect with us

Health Tips in Tamil, Tamil Health Tips

எலும்பு சம்பந்தமான பிரச்சினைகளை தீர்க்கும் சாமை அரிசி

மருத்துவ குறிப்புகள்

எலும்பு சம்பந்தமான பிரச்சினைகளை தீர்க்கும் சாமை அரிசி

சாமை இந்தியாவில் அதிகளவில் விளைவிக்கப்படுகிறது. இது ஆங்கிலத்தில் ‘Little Millet’ என அழைக்கபடுகிறது. இந்த தானியம் உயரமாகவும், நேராகவும் 30 செ.மீ முதல் 1 மீட்டர் வரை வளரக்கூடியது.

சாமை தானியமானது 5000 ஆண்டுகளுக்கு முன்னரே தெற்கு ஆசியக் கண்டத்தில் தோன்றியது. இந்தியாவில் உருவான இத்தானியம் இந்தியன் மிலட் எனவும் அழைக்கப்படுகிறது. இத்தானியம் மக்களின் முக்கிய உணவாக இருந்ததாக பண்டைய தழிழர்களின் கல்வெட்டுகளிலும், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களாலும் கூறப்படுகிறது.

இந்த சாமையில் புரதச்சத்து, தாது உப்புகள், கொழுப்புச்சத்து, சோடியம், மக்னீஷியம், காப்பர், பொட்டாசியம், துத்தநாகம், நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புசத்து ஆகியவை அடங்கியுள்ளது.

இந்த சாமை தானியத்தை சமைத்து சாப்பிடுவதால் அதில் உள்ள கால்சியம் நமது எலும்புகளுக்கு வலிமையை தருகிறது. மேலும் உடலின் தசைகளை வலிமை பெறச் செய்கிறது. மேலும் நாக்கின் வறட்சியை போக்குகிறது.

வயிறு தொடர்பான நோய்களை குணமாக்குகிறது. ஆண்களின் இனபெருக்க விந்தனுகளை அதிகரிக்க செய்கிறது. உடலில் உள்ள தாதுக்களை அதிகரிக்க செய்கிறது.

சாமையில் இரும்புசத்து அதிகமாக இருப்பதால், இரத்த சோகை நோய் வராமல் தடுக்கிறது. மேலும் உடல் வலிமை, உடல் ஆரோக்கியம் போன்றவை நமக்கு கிடைக்கிறது.

மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால் அதன் மூலமாக நமக்கு பல நோய்கள் வரும் , அந்த நோய்களை கட்டுப்பட்டுத்த சாமையை உணவோடு சேர்த்து சாப்பிட வேண்டும். மேலும் வயிற்று கோளாறுகளை சரிசெய்யும்.

அரிசியை விட ஏழு மடங்கு அதிக நார்ச்சத்து கொண்ட தானியம் சாமை, இதனை சாப்பிடும் போது சர்க்கரையின் நோயின் அளவை கட்டுப்படுத்துகிறது. மேலும் ஆரம்ப நிலை சர்க்கரை நோயை தடுக்கிறது.

சாமை தானியத்தில் உள்ள இயற்கை சுண்ணாம்பு சத்து, எலும்பு முறிவு மற்றும் எலும்பு சம்பந்தமானபிரச்சினைகளுக்கும், தசைகள வலிமைபெறவும் உதவுகிறது.

குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, ஆஸ்துமா, நுரையீரல் பிரச்சனைகளுக்கு சாமை உணவுகள் நல்ல மருந்தாக இருந்து வருகிறது. இதில் உள்ள போலிக் அமிலம், மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகள் உருவாகாமல் தடுக்கிறது. மேலும் குழந்தைகளுக்கும், விளையாட்டு வீரர்களுக்கும் நல்ல உடல் வலிமையை தரும்.

உடலில் அதிக கொழுப்புகளால் ஏற்படும் இதய சாந்த பிரச்சனைகளுக்கு சாமை நல்ல தீர்வாக அமைகிறது. மேலும் மாரடைப்பு வராமல் தடுக்கிறது. இதில் அதிக புரத சத்துக்கள் மற்றும் மருத்துவ குணங்கள் உள்ளது. இந்த தானியத்தின் மாவு மூலம் சாமை முறுக்கு, சாமை சோறு, சாமை இடியாப்பம், சாமை புட்டு, சாமை ரொட்டி, கேக், பிஸ்கட் என்று பலவிதமாக செய்து சாப்பிடலாம்.

Continue Reading
Advertisement
You may also like...

More in மருத்துவ குறிப்புகள்

Advertisement
Advertisement
To Top