கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி இருப்பதால் சானிட்டைசர் பயன்பாடும் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது . ஆனால் அதில் உள்ள ஆபத்துக்கள் பற்றி சிலருக்கு தெரிவதில்லை. அதில் உள்ள தீமைகள் பற்றி இதில் பார்ப்போம்.
கொரோனா வைரசிலிருந்து பாதுகாக்க ஆல்ககால் உள்ள சானிட்டைசர் பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் சில சானிட்டைசரில் ஆல்கஹாலுக்கு பதிலாக டிரைக்ளோசன் பயன்படுத்தப்படுகிறது.
ட்ரைக்ளோசன் பூச்சிக்கொல்லிகளுக்கு பயன்படுத்தப்படும் ஒரு சக்திவாய்ந்த பாக்டீரியா எதிர்ப்பு பொருளாகும். இது கல்லீரல் மற்றும் தசைகளின் செயல்பாட்டை பாதிக்கும்.
சாப்பிடுவதற்கு முன்பு உங்கள் கைகளை சுத்தப்படுத்த சானிட்டைசரை பயன்படுத்த வேண்டாம். இதில் உள்ள கெமிக்கல்கள் நோய் எதிர்ப்பு சக்திக்கு தீங்கு விளைவிக்கும்.
வாசனை மிகுந்த சானிட்டைசர் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இதில் கூடுதல் நச்சுக்களும் கெமிக்கல்களும் சேர்க்கப்படுகிறது.
சானிட்டைசரை பயன்படுத்தி விட்டு நெருப்பிற்கு அருகில் செல்ல வேண்டாம். இது உங்களுக்கு கடுமையான தீக்காயங்களை ஏற்படுத்தும்.
காரில் உள்ள சானிட்டைசர் பாட்டிலை நன்றாக மூடி வைக்க வேண்டும். திறந்த நிலையில் இருந்தால் அது ஆவியாகி கார் பற்றிக் கொள்ள வாய்ப்பு உள்ளது.
குழந்தைகளுக்கு எட்டாத உயர்த்தி சானிட்டைசரை வைக்க வேண்டும்.
உங்கள் முகக்கவசத்தை சானிட்டைசர் கொண்டு சுத்தம் செய்யாதீர்கள். தண்ணீரை பயன்படுத்துங்கள்.
சானிட்டைசர் பயன்படுத்துவதை தவிர்த்து சோப்பு மற்றும் தண்ணீரை பயன்படுத்துவது நல்லது.