சார்பட்டா பரம்பரை : வசூல் எத்தனை கோடி தெரியுமா?

ஆர்யா, பசுபதி நடிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த ‘சார்பட்டா பரம்பரை’ படம் அமேசான் பிரைமில் வெளியிடப்பட்டது. இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

ஆர்யா, பசுபதி, ஜான் கொக்கன், துஷாரா விஜயன், கலையரசன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரசிகர்கள் மத்தியிலும், பிரபலங்கள் மத்தியிலும் இந்தப்படத்திற்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் ஓடிடி-யில் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படம் சுமார் ரூ. 14 கோடி லாபம் கொடுத்துள்ளதாம். ரூ. 24 கோடிக்கு உருவான இப்படம் சுமார் ரூ. 38 கோடிக்கு மொத்த பிசினஸ் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Advertisement