சேனைக்கிழங்கில் உள்ள மருத்துவ குணங்கள்

சேனைக்கிழங்கில் குர்செடின் (Quercetin) எனப்படும் வேதிப்பொருள் உள்ளது.
சேனைக்கிழங்கில் பீட்டா கரோட்டின் மற்றும் கார்போஹைட்ரேட் மிகவும் குறைந்த அளவே உள்ளது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மிக அதிகளவில் உள்ளன. இதை அனைவரும் சாப்பிடலாம்.

சேனைக்கிழங்கில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் மலச்சிக்கல் பிரச்சனை வராமல் தடுக்கிறது. சேனைக்கிழங்கு உடலில் உள்ள கொழுப்பின் அளவை குறைக்கிறது. மேலும் இது புற்றுநோய் ஏற்படுத்தும் தன்மையை குறைக்கிறது.

சேனைக் கிழங்கை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.

சேனைக்கிழங்கில் வைட்டமின் சி இருப்பதால் எலும்புகளை வலுவாக்கும். நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாகும். ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களில் உற்பத்தி செய்து இரத்த சோகையை குணமாகும்.

சேனைக்கிழங்கு உடலில் பித்தக் கோளாறுகள், வயிற்றுக் கோளாறுகள் முதலியவற்றையும் இது குணமாக்குகிறது. குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் நல்ல உணவு. இது உடலை வலுவடையச் செய்யும்.

Recent Post