உடலில் சேரும் நச்சுக்களை நீக்கும் செவ்வாழைப்பழம்

பொதுவாக வாழைப்பழங்களில் பொட்டாசியம் சத்து அதிகமாக நிறைந்துள்ளது. எனவே காலையில் தினமும் செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால், சுறுசுறுப்பு நம்மிடம் அதிகரிக்கும், சோர்வை நீக்கும். மேலும் மூளை எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க செவ்வாழைப்பழம் மிகவும் உதவுகிறது.

சிலருக்கு உடலில் அதிகமான நச்சுகள் சேருவதால், கல்லீரல் வீக்கம் ஏற்படுகிறது. இப்பிரச்சனை உள்ளவர்கள் தினமும் காலையில் ஒரு செவ்வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால் கல்லீரலில் இருக்கும் நச்சுக்கள் மற்றும் கல்லீரல் வீக்கம் ஆகியவை குணமாகும்.

செவ்வாழைப்பழத்தை அதிகமாக சாப்பிடுவதால் வாயில் ஏற்படும் தூர்நாற்றத்தை தடுக்கிறது. மேலும், பல் சொத்தை, பற்களில் ரத்த கசிவு, ஈறுகளில் வீக்கம் ஆகியவற்றை குணமாக்குகிறது.

கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் பெண்களுக்கும் தேவையான சத்துக்களும் செவ்வாழைப்பழத்தில் அடங்கியுள்ளது. மேலும் கர்ப்பிணி பெண்கள் தினமும் இப்பழத்தை சாப்பிட்டு வருவதால், அவர்களின் வயிற்றில் வளரும் குழந்தைக்கு நன்மைகளை அளிக்கிறது.

செவ்வாழைப்பழத்தில் வைட்டமின் ஏ அதிகமாக நிறைந்துள்ளதால், கண்களில் ஏற்படும் கண்புரை தடுக்கிறது. மேலும் கருவிழி, விழிப்படலம் ஆகியவற்றை ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. மாலைக்கண் நோயில் இருந்து நம்மை பாதுக்காக்கிறது.

ஏற்கனவே சொன்னது போல் இப்பழத்தில் பொட்டாசியம் சத்து அதிக இருப்பதால், உடலில் இருக்கும் நரம்புகளில் இறுக்கத்தன்மை ஏற்படாதவாறு தடுக்கிறது. ரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது. மேலும் இதயத்திற்கு சரியான அளவில் ரத்தம் சென்று வர வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் அதிகம் உதவுகிறது. இதய நோய்களை தடுக்கிறது.

தினமும் காலையில் செவ்வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால் அஜீரணக் கோளாறு ஏற்படாது. மலச்சிக்கல், மூல நோய் போன்றவை குணமாக தினமும் தினமும் செவ்வாழைப்பழத்தை சாப்பிட வேண்டும்.

செவ்வாழைப்பழத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் தன்மை அதிகமாக நிறைந்துள்ளது. மனிதர்களை தொற்றும் தொற்று நோய்களை அழிக்கும் சக்தியை கொண்டது.

நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினந்தோறும் இரவு வேளைகளில் செவ்வாழைப்பழம் சாப்பிட வேண்டும். தொடர்ந்து 48 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வந்தால் நரம்புகள் பலம் பெறும். ஆண்மை குறைவு பிரச்சனைகள் நீங்கும்.

Recent Post