தைராய்டு நோயை குணப்படுத்தும் சங்கு முத்திரை

தினமும் முத்திரை செய்து வருவதால் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். அந்த வகையில் சங்கு முத்திரை செய்வது எப்படி? அதன் பலன்கள் என்ன என்பதை இதில் பாப்போம்.

இந்த முத்திரை சங்கு வடிவம் போல் இருக்கும். இதனால் இதை சங்கு முத்திரை என அழைக்கப்படுகிறது. படத்தில் காட்டியுள்ளபடி இடது கையின் பெருவிரலை வலது கை விரல்களால் மூடிக்கொள்ளவும். இடது கையின் மற்ற விரல்கள் வலது கை விரல்களின் பின்பகுதியில் இருக்குமாறு வைத்துக்கொள்ளவும். வலது கட்டை விரலின் நுனி பகுதியும் இடது நடுவிரலின் நுனி பகுதியும் தொடும்படி இருக்க வேண்டும். இம்முத்திரையை 20 நிமிடங்கள் வரை இருமுறை செய்யலாம்.

சங்கு முத்திரை பயன்கள்

இந்த முத்திரையை செய்வதால் தைராய்டு குணமாகும். நமது உடலில் தொப்புளுக்கு கீழே உள்ள 72000 நரம்புகளை சக்தியுடன் இயங்கவைக்கும். உடலில் உள்ள எரிச்சல் நீங்கும். ஜீரண சக்தியை அதிகரிக்கும். நல்ல பசி உண்டாகும். தொண்டையில் ஏற்படும் நோய், அலர்ஜி மற்றும் தோல் நோய்களை குணப்படுத்தும்.