நோயற்ற வாழ்வுக்கு வழிகாட்டும் ஆசனம் சுப்தவஜ்ராசனம். உடம்பை வஜ்ரம்போல் திடப்படுத்தி கால், கைகளையும் உருண்டு திரண்டு வலுப்பெறச் செய்வதால் சுப்தவஜ்ராசனம் என்ப் பெயர் பெற்றது.
சுப்தவஜ்ராசனம் செய்முறை
தரைவிரிப்பில் கால்களை நீட்டிக் கொண்டு உட்கார வேண்டும். பின்பு இடது காலை உள்பக்கமாக தொடையை ஒட்டி மடக்க வேண்டும். பின்னர் வலது காலை உள்பக்கமாக தொடையை ஒட்டி மடக்க வேண்டும். இரண்டு கால் முட்டிகளும் தரைவிரிப்பில் நன்று பதிந்திருக்க வேண்டும்.
இரு உள்ளங்கால்களும் மேல்நோக்கி இருக்க வேண்டும், பின் குதிங்கால்கள்மீது உட்கார வேண்டும். இரு உள்ளங்கைகளும் இரு மூட்டுகளின் மீது இருக்க வேண்டும். இது வஜ்ராசனம் நிலை, வஜராசன நிலையில் இருந்து இரு கைகளையும் பக்கவாட்டில் ஊன்றி பின்புறம் படுக்க வேண்டும்.
பின் இரு கைகளையும் இரு தொடைமீது வைக்க வேண்டும். இதுவே சுப்தவஜ்ராசனம் என்ப்படும். பின்னர் மெதுவாக எழுந்து இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும். நான்கைந்து முறை செய்யலாம்.
சுப்தவஜ்ராசனம் பலன்கள்
- எந்த ஒரு நோயும் உடலை பாதிக்காது.
- கால்களை வலுவாக்கும்.
- முதுகெலும்பை திடப்படுத்தும்.
- இரத்த ஓட்டத்தை விருத்தி செய்யும்.
- சுறுசுறுப்பையும், புத்துணர்ச்சியையும் தரும்.