சித்தாசனம் செய்முறையும் அதன் பலன்களும்

இச்சையை விலக்கி, கோபத்தினை ஒதுக்கி, மனதினை அடக்கி, சுகம் தரும் ஆசனம் சித்தாசனம் ஆகும்.

siddhasana benefits in tamil

சித்தாசனம் செய்முறை

தரைவிரிப்பில் அமர்ந்து இடது பாதத்தை வலது அடித்தொடையை தொடச் செய்து, வலது பாதத்தை இடது கணுக்காலின்மீது வைக்க வேண்டும்.

இவ்வாறு செய்யும்போது வலது குதிங்கால் அடிவயிற்றைத் தொட்டு இருக்க வேண்டும். மேலும், இரு கைகளும் முழங்கால்களின் மேல் சின்முத்திரையில் வைக்க வேண்டும்.

இடை, முதுகு, தலை, பார்வை யாவும் நேராக இருக்க வேண்டும். சுவாசம் சீராக இருக்க வேண்டும். இதைபோல் வலது பாதத்தையும் உபயோகித்துச் செய்யலாம்.

சித்தாசனத்தின் பயன்கள்

  • மார்பு விரிவடையும்.
  • முதுகெலும்பு, தேகம் பலமடையும்.
  • மனம் சாந்தமாகும்.

மேலும், அனைத்து யோகாசனங்கள் மற்றும் அதன் பலன்களையும் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.