வெள்ளிப் பாத்திரங்களில் உணவை வைத்து சாப்பிடுவதை நாம் ஆடம்பரம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அறிவியல் ரீதியாக வெள்ளிப் பாத்திரங்களில் சாப்பிடுவது ஏராளமான நன்மைகளைத் தரும்.
உடலில் சூடு அதிகம் உள்ளவர்கள் தங்களுடைய உணவை வெள்ளிப் பாத்திரத்தில் வைத்து சாப்பிடுவது உடல் சூட்டைத் தணிக்கும். உடலின பிஎச் (ph) அளவையும் சீராக வைத்திருக்கும்.
வெள்ளிப் பாத்திரங்களில் உணவை வைத்து சாப்பிட்டு வருபவர்களுக்கு மன ஆரோக்கியம் மேம்படும் என்று பல்வேறு ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
குழந்தைகளுக்கு வெள்ளிப் பாத்திரங்களில் உணவை வைத்து ஊட்டுவதன் மூலம் அவர்களுக்கு நோயெதிர்ப்பு ஆற்றலை பல மடங்கு அதிகரிக்கச் செய்யும்.
சிறுவயது முதலே வெள்ளிப் பாத்திரங்களில் சமைப்பது, வெள்ளிப் பாத்திரங்களில் வைத்து சாப்பிடுவது போன்ற பழக்கங்கள் இருப்பவர்களுக்கு உடல் நோய்கள் இன்றி நீண்ட ஆயுளுடன் வாழ்வார்கள்.