இரவில் நன்றாகத் தூங்க வேண்டுமா? அப்ப இந்த தவறுகளை செய்யாதீங்க..!

தினமும் நிம்மதியா தூங்கினால்தான் மறுநாள் சோர்வில்லாமல் டென்ஷன் ஆகாமல் வேலை பார்க்க முடியும். அதாவது, இரவில் தூங்குவது மனித உடலுக்கு ‘சார்ஜ்’ ஏற்றிக்கொள்வது போன்றது.

அளவுக்கு அதிகமான வேலை, ஒயாத அலைச்சல் காரணமாக சிலர் தேவையான அளவுக்கு தூங்குவது இல்லை. தொழிற்சாலைகளில் பணியாற்றுபவர்களாலும் குறித்த நேரத்துக்கு தூங்க முடியாது.

அப்படிப்பட்டவர்களுக்கு ஓரளவு வயதான பிறகு இதய நோய்கள், நீரிழிவு போன்றவை வரும் என்று கண்டுபிடித்துள்ளனர். இதுதவிர வெகு விரைவில் முதுமைத் தோற்றத்தை எட்டத் தொடங்கி விடுவார்கள்.

நீங்கள் இரவில் தூக்கம் இல்லாமல் புரளுகிறவரா? இதைப் படியுங்கள். படிப்பதோடு விட்டுவிடாமல் கடைபிடிக்கவும் செய்யுங்கள்.

தினமும் இரவில் குறிப்பிட்ட ஒரே நேரத்தில் தூங்கும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள்.
தினசரி சிறிது நேரமாவது உடற்பயிற்சி செய்து வாருங்கள்.

பகலில் தூங்குவதை நிறுத்துங்கள். நிறுத்த முடியாது என்றால் கண்டிப்பாக பகலில் உறங்கும் நேரத்தைக் குறையுங்கள்.

இரவு சாப்பாட்டுக்கு உட்கார்ந்தால் மூச்சு முட்ட சாப்பிட்டு விடாதீர்கள். அரை வயிறு சாப்பாடு உடலுக்குப் போதும். அப்படியானால்தான் முழு தூக்கம் வரும்.

படுக்கைக்குச் செல்லும் முன்பு குடிக்கும் பழக்கம் இருந்தால் முதலில் அதை நிறுத்துங்கள்.

மன நிலையை சீர்குலைக்கும் விதத்தில் உள்ள டெலி விஷன் நிகழ்ச்சிகளை இரவில் பார்க்க வேண்டாம். அவ்வாறான புத்தகங்களையும் படிப்பது நல்லதல்ல.

நீங்கள் தூங்க முடிவு செய்து படுக்கைக்குச் சென்றதும் அந்தப் பகுதியில் மற்றவர்கள் வர அனுமதிக்க வேண்டாம். பீரோவைத் திறப்பது, லைட்டைப் போட்டு அணைப்பது போன்றவை வருகின்ற தூக்கத்தை விரட்டி விடும்.

படுக்கைக்குப் போன பின்பு வாழ்க்கைப் பிரச்சினைகளையும் தொல்லைகளையும் இடர்ப்பாடுகளையும் நினைப்பது, அதைப்பற்றி சிந்திப்பதும் தூக்கத்தை விரட்டி விடும்.

Recent Post