பாம்பு கடித்தால் என்ன செய்ய வேண்டும்?

இந்தியாவில் பதிவாகும் பாம்புக்கடி எண்ணிக்கையில் 70% நஞ்சற்ற பாம்புகள், 30% நஞ்சுள்ள பாம்புகள் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பாம்பு கடித்தால் முதலில் பதறாதீர்கள். பதறினால் தான் பாம்பின் விஷம் வேகமாக ரத்த ஓட்டத்தில் கலக்கும். எனவே முடிந்த வரை பதறாமல் இருங்கள்.

பாம்பு கடித்த உடனே அருகிலுள்ள மருத்துவனைக்குச் செல்ல வேண்டும். மருத்துவமனைக்குச் செல்வதற்கு முன் வேறு ஏதேனும் உணவோ அல்லது மாற்று மருந்துகளையோ உட்கொள்ளக்கூடாது.

பாம்பு கடித்தால் தானாக நடந்தோ அல்லது வண்டியை ஓட்டி கொண்டோ மருத்துவமனைக்குப் போகக்கூடாது. அவசர ஊர்தி அல்லது வேறு வாகனத்தில் பாதுகாப்பாகப் செல்ல வேண்டும்.

பாம்பு கடித்த இடத்தில் காலனிகள், மோதிரம், நகைகள் மற்றும் இறுக்கமான ஆடைகள் இருந்தால் அதைக் கண்டிப்பாக அகற்ற வேண்டும்.

சினிமாவில் பாம்பு கடித்தால் அந்த இடத்தை கத்தியை கொண்டு கட் செய்து, வாயை வைத்து சிலர் உறிஞ்சி எடுப்பார்கள். இது போல செய்யக்கூடாது. அப்படி செய்தால் நிலைமை மோசமாகிவிடும்.

தமிழகத்தில் பெரும்பாலான மருத்துவமனைகளில் பாம்புக் கடிக்கு விஷமுறிவு மருந்து இருக்கிறது. எனவே, பாம்பு கடித்தால் உடனடியாக மருத்துவச் சிகிச்சையை எடுத்துக் கொள்வது தான். அதற்குப் பதில் வீட்டு மருத்துவம் என நீங்களாகவே முயற்சி செய்தால் அது உயிருக்கு ஆபத்தையே தரும்.