கனவில் பாம்பு வந்தால் என்ன அர்த்தம் என்று தெரியுமா?

கனவில் பாம்பு வந்தால் என்ன நடக்கும் என்பதை பற்றி பார்ப்போம். கனவில் பாம்பு வந்தால், அதற்கு பல அர்த்தங்கள் உள்ளது.

பாம்பு கனவில் வந்தால் நீங்கள் ஒரு கஷ்டமான சூழ்நிலையை கையாண்டு கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

கனவில் குட்டி பாம்பு வந்தால் உங்களுக்கு வரும் அச்சுறுத்தலை நீங்கள் குறைத்து மதிப்பிடுகிறீர்கள் என அர்த்தமாகும்.

பாம்பை கொன்றது போலவோ அல்லது பாம்பு இறந்தாலோ, உங்களை சுற்றியுள்ள ஆபத்து நீங்கிவிட்டது என்று அர்த்தம்.

நல்ல பாம்பு கனவில் வந்தால் விரோதிகளால் தொல்லை உண்டாகும். இரட்டைப் பாம்புகளை கண்டால் நன்மை உண்டாகும்.

பாம்பு உங்களை கடித்தது போல கனவு வந்தால் தனலாபம் உண்டாகும். பாம்பு விரட்டுவதாக கனவு கண்டால் வறுமை உண்டாகும்.

பாம்பு கடித்து ரத்தம் வருவதுபோல கனவு வந்தால் உங்களை பிடித்த சனி நீங்கிவிட்டது என்று அர்த்தம்.

Recent Post

RELATED POST