வெட்டுக்கிளி பற்றிய தகவல்கள்

வெட்டுக்கிளிகளில் 2400 பேரினங்களும் அவற்றுள் 11 ஆயிரம் இனங்கள் கண்டறியப்பட்டுள்ளது.

வெட்டுக்கிளிகளுக்கு விவசாயிகளின் விரோதி என்று ஒரு செல்லப் பெயருண்டு. ஏனெனில் வெட்டுக்கிளிப் பட்டாளம் விளைநிலத்திற்குள் நுழைந்து விட்டால், ஒட்டுமொத்த பயிர்களையும் நாசம் செய்துவிடும்.

வெட்டுகிளிகளின் அட்டகாசத்தால் 1880 ம் ஆண்டில் ரஷ்யாவின் தெற்கு பிரதேசத்தின் மக்கள் கதவை சாத்திக்கொண்டு வீட்டிற்குள்ளையே முடங்கி கிடந்தார்களாம்.

Also Read : வண்ணத்துப்பூச்சி பற்றி சில தகவல்கள்

1955ம் ஆண்டில் மொராக்கோ நாட்டிற்குப் பறந்து வந்த வெட்டுக்கிளிக் கூட்டத்தின் அகலம் இருபது கிலோ மீட்டர் வரை இருந்ததாம்.

வேளாண்மை செய்யப்படும் பயிர்ச் செடிகளுக்குக் சேதம் விளைவிப்பதால் இது உழவர்களின் எதிரி என்று அறியப்படுகிறது.

வெட்டுக்கிளிகளுக்கு பின் இணைக்கால்கள் நன்கு வலுவுடையதாக இருப்பதால் இவைகளால் தரையிலிருந்து நீண்ட தூரம் தாவி பறக்க முடியும்.

வெட்டுகிளிகளில் புரத சத்து நிறைந்திருப்பதால் சில நாடுகளில் குறிப்பாக மெக்சிகோவில் இதனை உணவாக உட்கொள்கின்றனர்.

Recent Post

RELATED POST