சிங்கத்தை பற்றி சில உண்மைகள்

ஒவ்வொரு விலங்கிற்கும் ஒரு மறுபக்கம் இருக்கும், அவ்வாறு காட்டின் அரசன் என்று அழைக்கப்படும் சிங்கத்தினை பற்றி இப்போது சில உண்மைகளை காண்போம்.

ஒரு ஆண் சிங்கத்தின் எடை 250 கிலோ வரை இருக்கும். சிங்கம் பூனை குடும்பத்தை சேர்ந்தது. சிங்கத்தின் கர்ஜனை சுமார் 8 கிலோமீட்டர் (5 மைல்கள்) வரை கேட்கும்.

ஆண் சிங்கங்கள் 10லிருந்து 14 வருடங்கள் வரை வாழ்கிறது. மிருகங்களை வேட்டையாடுவது 90% பெண் சிங்கங்களே. சிங்கத்தினை எதிர்த்து போராடும் விலங்கு முள்ளம்பன்றி.

Also Read : சிங்கம் கனவில் வந்தால் என்ன அர்த்தம்?

பெண் சிங்கங்கள், அடர்த்தியான கருகருவென பிடரி முடிகள் கொண்ட ஆண் சிங்கங்களையே விரும்புகிறது.

2005ல், எத்தியோப்பியன் பெண் ஒருவர் 7 ஆண்களால் கொடூரமாக தாக்கப்பட்டார், அப்போது சிங்கங்கள் அந்த கும்பலிடமிருந்து அப்பெண்ணை காப்பாற்றி, வேறு மாற்று உதவி வரும் வரை அப்பெண்ணின் அருகிலே சிங்கங்கள் காவலுக்கு இருந்தன.

சிறுத்தைப்புலிக்கும், பெண்சிங்கத்திற்கும் உள்ள உடல் மற்றும் தலை அமைப்பு கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருக்கும்.

மலைகளில் வாழும் சிங்கங்கள் தான் வேட்டையாடிய உணவுகளை பூமிக்குள் புதைத்து வைத்து, தேவைப்படும் பொழுது எடுத்து உண்ணும்.

இனப்பெருக்க காலங்களில் ஒரு நாளில் 20 முதல் 40 முறை உறவு வைத்துக்கொள்ளும்.

Recent Post

RELATED POST