எறும்புகள் பற்றிய சில தகவல்கள்

உலகில் இதுவரை கிட்டத்தட்ட 6000 வகை எறும்புகள் உள்ளன. இவை தேனீக்கள் குளவிகள் வரிசையை சேர்ந்த உயிரினங்கள். எல்லா எறும்புகளும் சமூக பிராணிகள். கூட்டம் கூட்டமாக வாழும். பல்வேறு அளவுகள் கொண்டது.

முக்கியமாக ராணி எறும்பு அல்லது பெண் எறும்பு, ஆண் எறும்புகள், பாட்டாளி எறும்புகள்,  சில நேரங்களில் பிரத்தியோகமான பாட்டாளி எறும்புகளும் உண்டு. எடுத்துக்காட்டாக சிப்பாய் எறும்புகள்.

மிகவும் நுணுக்கமான சமூக வாழ்க்கை எறும்புகளுக்கு உண்டு. ஒவ்வொரு வகை எறும்புகளுக்கு வேலைகள் ஒதுக்கப்பட்டு, அவற்றையே அவை செய்கின்றன.

சில வகை எறும்புகள் மற்ற எறும்புகளோடு போரிட்டு அவற்றை அடிமை கொள்கின்றன. இவை அந்த முட்டைகளை தம்மோடு கவர்ந்து வந்து  விடுகின்றன. மற்ற பூச்சிகளிடமிருந்து பால் கறக்கும் எறும்புகளும் உண்டு! பழைய எறும்பு புற்றுகளில் விருந்தினர்களும் இருப்பதுண்டு. வெள்ளிமீன், குளவிகளை இங்கு குறிப்பிடலாம். சில எறும்புகள் தானியங்களை அறுவடை செய்கின்றன.

தென் அமெரிக்க எறும்புகள் பூஞ்சக் காளானை  நிலத்தடியில் வளர்த்து உண்கின்றன. இவை சாரி சாரியாக புறப்பட்டால் ஒரு கிராமமே மனிதர்கள் மிருகங்கள் உட்பட காலி செய்துவிடும். ஏனெனில் இவை கடித்துக் குதறினால் எலும்புக்கூடு மட்டுமே மிஞ்சும். உலகின் எல்லாப் பகுதிகளிலும் எறும்புகள் காணப்பட்டாலும், இவற்றில் பெரும்பாலானவை வெப்ப வலயங்களிலேயே வாழ்கின்றன.

எறும்புகள் ஏறத்தாழ 110 முதல் 130 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர்தான் தனி வகையான உயிரினமாக உருப்பெற்றன எனக் கருதுகின்றார்கள்.

Recent Post

RELATED POST