எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சோயா பீன்ஸ்

சோயா பீன்ஸில் புரதம், வைட்டமின் சி, கால்சியம், இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளது. சைவ உணவு உண்பவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.

வேகவைத்த பச்சை சோயாபீன்ஸில் 141 கி கலோரிகள்,12.35 கிராம் புரதம், 6.4 கிராம் கொழுப்பு, 11.05 கிராம் கார்போஹைட்ரேட், 4.2 கிராம் நார்ச்சத்து உள்ளது.

சோயாபீன்ஸ் சாப்பிடுவதால் உடல் உறுப்புகளை சுற்றி கொழுப்பு படிவதை தடுக்கிறது. எனவே : உடல் எடையை குறைக்க விருப்பம் உள்ளவர்கள் கண்டிப்பாக சோயா பீன்ஸினை எடுத்துக் கொள்வது அவசியம்.

புரோஸ்டேட் மற்றும் மார்பக புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைப்பதில் சோயா முக்கிய பங்காற்றுகிறது.

சோயா பீன்ஸில் கால்சியம் சத்து நிறைந்துள்ளதால் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். எலும்பு முறிவு ஏற்பட்ட ஒருவர் தொடர்ந்து சோயா பீன்ஸினை சாப்பிட்டு வந்தால் விரைவில் குணமாகும்.

இதையும் படிங்க : இந்த உணவுகளை சாப்பிட்டால் தலைவலி வரும்

சோயா நிறைந்த உணவை உட்கொண்டால் பக்கவாதம் மற்றும் இதய நோய்களின் அபாயத்தை 15 முதல் 20 சதவீதம் வரை குறைப்பதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

சோயா பீன்ஸ்களில் உள்ள ‘ஐசோஃப்ளேவோன்கள்’ நீரழிவினை ஏற்படுத்தும் காரணிகளை கட்டுப்படுத்துகிறது. எனவே நீரழிவு நோயாளிகள் அடிக்கடி சோயா பீன்ஸ் சாப்பிடலாம்.

சோயாபீனில் கரையாத நார்ச்சத்து உள்ளது. இதை அதிகமாக சாப்பிடுவது வாயு மற்றும் வயிற்றுப்போக்கு அபாயத்தை அதிகரிக்கலாம். எனவே இதனை அளவுடன் எடுத்துக்கொள்வது நல்லது. அதே போல ஹைப்பர் தைராய்டிசம் உள்ளவர்கள் சோயா பீன்ஸ்களை உட்கொள்ள கூடாது.

Recent Post

RELATED POST