பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியம் பற்றி சில தகவல்கள்

உலக அளவில் அதிக எண்ணிக்கையிலான பாடல்களைப் பாடியதற்காக கின்னஸ் உலக சாதனைகள் புத்தகத்தில் இடம் பிடித்தவர் எஸ். பி. பாலசுப்பிரமணியம். இதுவரை நாற்பதாயிரம் பாடல்களைப் பாடியுள்ளார்.

திரைப்பட பாடகர், திரைப்பட இசை அமைப்பாளர் திரைப்படத் தயாரிப்பாளர், திரைப்பட நடிகர், திரைப்பட பின்னணிக் குரல் தருபவர் எனப் பன்முக அடையாளம் கொண்டவர்.

2001 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதும் 2011 ஆம் ஆண்டில் பத்மபூஷண் விருதும் இந்திய அரசு இவருக்கு வழங்கியது. 2016 ஆம் ஆண்டு இந்திய திரைப்பட பிரமுகர் விருது வழங்கப்பட்டது.

நான்கு மொழிகளுக்கு தேசிய விருதினை பெற்ற ஒரே திரைப்படப் பின்னணிப் பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியம் தான்.

டைப்பாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பாலசுப்பிரமணியம் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு சென்னையில் உள்ள வேறொரு கல்லூரியில் சேர்ந்து படித்தார்.

தன் மகன் பொறியாளன் ஆக வேண்டும் என்பதுதான் இவர் தந்தையின் ஆசை. ஆனால் கல்லூரியில் படிக்கும் போதே பல இசை போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளைப் பெற்றுள்ளார்.

இவருடைய மகன் எஸ். பி. பி. சரண், சரண் சிறந்த பின்னணி பாடகர், நடிகர், சின்னத்திரை தொடர் நடிகர், மற்றும் தயாரிப்பாளராக இருந்து வருகிறார்.

1979 இல் வெளிவந்த சங்கராபரணம் திரைப்படப் பாடல்கள் மூலம் உலகளவில் பிரபலமானார் எஸ் பி பாலசுப்பிரமணியம்.

1970களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான எம். ஜி. ராமச்சந்திரன், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ஜெய்சங்கர் என பல நடிகர்களுக்கு பின்னணி பாடியுள்ளார்.

பின்னணிப்பாடகிகளான பி. சுசீலா, எஸ். ஜானகி, வாணி ஜெயராம் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இவர்களோடு பல பாடல்களை பாடியுள்ளார்.

1990களில் இசையமைப்பாளர்களான தேவா, வித்யாசாகர், எம். எம். கீரவாணி , எஸ். ஏ. ராஜ்குமார், பரத்வாஜ் போன்றோரின் இசையில் நிறைய பாடல்களைப் பாடினார்

மின்சார கனவு படத்தில் ‘தங்கத்தாமரை மகளே’ என்ற பாடலுக்காக சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருது 1996 ஆம் ஆண்டில் ஆறாவது முறையாக பெற்று சென்றார்.

2000ஆம் ஆண்டிற்கு பிறகு யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ்,டி. இமான், ஜி. வி. பிரகாஷ்குமார், போன்றோரின் இசையமைப்பில் பாடல்களை பாடியுள்ளார்.

120 தெலுங்கு திரைப்படங்களில் நடிகர் கமல்ஹாசனுக்கு எஸ் பி பி பின்னணிக்குரல் கொடுத்துள்ளார்.

இவர் மதங்களை கடந்து பக்திப்பாடல்கள் பல பாடியுள்ளார் இதற்காக 2015ஆம் ஆண்டுக்கான கேரள அரசின் “ஹரிவராசனம்” விருது பெற்றுள்ளார்.

Recent Post

RELATED POST