சாப்பாடு குழைந்துவிட்டால் என்ன செய்யலாம்..! சில சூப்பர் டிப்ஸ்..!

முன்னுரை:-

சாப்பாடு குழைந்துவிட்டால், அதனை எப்படி சத்தான உணவுப்பொருளாக மாற்றலாம் என்று தற்போது பார்க்கலாம்.

விளக்கம்:-

சாப்பாடு குழைந்துவிடுதல், எப்போதும் பெண்களுக்கு தலைவலி பிடித்த வேலையாக மாறிவிடும். ஆனால், அந்த குழைந்துவிடும் சாப்பாட்டையும், சுவையான உணவாக மாற்றிவிட முடியும்.

அதற்கான வழிகள் பின்வருமாறு உளளது:-

1. தயிர்சாதம்

2. பக்கோடா

3. தோசை

தயிர்சாதம்:-

சோறு குழைந்துவிட்டால், அதனைக் கண்டு பெண்கள் வருத்தம் அடைய வேண்டாம். 1 கப் பால் மற்றும் தயிரை ஒன்றாக போட்டுக் கலக்கி;க்கொள்ளுங்கள்.

பிறகு, ஊளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, கடுகு, கருவேப்பிலை போட்டு நன்றாக தாளியுங்கள். தாளித்து முடித்ததும், அதனை சாப்பாட்டில் போட்டு கிளறுங்கள். இதையடுத்து, மாதுளைப் பழம் இருந்தால், அதனை தயிர் சாதத்தில் தூவி விடுங்கள்.

பக்கோடா:-

சோறு குழைந்துவிட்டால், அதில் கடலை மாவை வைத்து பிசைந்துக்கொள்ளுங்கள். பிறகு, அதில் வெங்காயம் சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளுங்கள்.

இதையடுத்து, வெங்காயம், கொத்தமல்லி, தேவையான அளவு உப்பு ஆகியவற்றை, அந்த கலவையில் சேர்த்து எண்ணெயில் பொறித்து எடுங்கள். பக்கோடாவாக மாறும், அந்த குழைந்த சாப்பாடு.

தோசை:-

குழைந்த சோற்றை தோசை மாவாக மாற்றியும் அசத்தலாம். குழைந்த சோற்றில் ஒரு கப் தயிர், உப்பு, வெங்காயம் நறுக்கி போட்டுக்கொள்ளுங்கள். பிறகு தோசையாக சுடுங்கள்.

Recent Post

RELATED POST