திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் வரலாறு

திருச்சிக்கு அருகில் அமைந்துள்ள இந்த ஸ்ரீரங்கம் பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுகிறது. 108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும் முதன்மை வசிப்பிடமாகவும் ஸ்ரீரங்கம் விளங்குகிறது. இந்தத் திருத்தலம் திராவிட பாணியில் கட்டிடக்கலை கட்டப்பட்டுள்ளது.

ஸ்ரீரங்கநாதரின் பெருமையை கருடபுராணம், பிரும்மாண்ட புராணம், ஸ்ரீரங்க பிரும்ம வித்தை, ஸ்ரீரங்க மாகாத்மியம், ஸ்ரீ குண ரத்ன கோசம், ஸ்ரீ பாதுகா சகஸ்ரம் முதலிய நுல்களில் மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோவில் 156 ஏக்கர் நிலப்பரப்பு மற்றும் 4116 மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. ஏழு பிரகாரம் உள்ள இக்கோவிலில் 21 கோபுரங்கள் 72 மீட்டர் உயரத்தில் உள்ளது. தினமும் ஆயிரக்கணக்காக பக்தர்கள் கோவிலுக்கு வருவது வழக்கம். மார்கழி மாதத்தில் மட்டும் 10 லட்சம் பக்தர்கள் வந்து விஷ்ணுவை வழிபட்டு செல்கின்றனர்.

இக்கோவிலில் உள்ள ராஜகோபுரத்தின் மொத்த எடை ஒரு இலட்சத்து 28 ஆயிரம் டன்கள் ஆகும். தென்னிந்தியாவிலேயே பெரிய கோபுரமாக விளங்குகின்றது.

இத்தலத்தில் ஆதி பிரம்மோட்சவம், பூபதி திருநாள் என்று இந்த பிரமோட்சவங்கள் என மூன்று பிரமோற்சவங்கள் நடைபெறுகின்றன.

நவ தீர்த்தம்

  1. சந்திர புஷ்கரணி
  2. வில்வ தீர்த்தம்
  3. சம்பு தீர்த்தம்
  4. பகுள தீர்த்தம்
  5. பலாச தீர்த்தம்
  6. அசுவ தீர்த்தம்
  7. ஆம்ர தீர்த்தம்
  8. கதம்ப தீர்த்தம்
  9. புன்னாக தீர்த்தம்

7 பிரகாரங்கள்

முதல் பிரகாரம் – தர்மவர்மன் திருச்சுற்று
இரண்டாம் பிரகாரம் – ராஜ மகேந்திரன் திருவீதி
மூன்றாம் பிரகாரம் – குலசேகரன் திருவீதி
நான்காம் பிரகாரம் – ஆலிநாடன் திருவீதி
ஐந்தாம் பிரகாரம் – அகளங்கன் திருவீதி
ஆறாம் பிரகாரம் – திருவிக்ரமன் திருவீதி
ஏழாம் பிரகாரம் – சித்திரை திருவீதி

முக்கிய திருவிழாக்கள்:

வைகுண்ட ஏகாதேசி
பிரம்மோற்சவம்
ஜேஷ்டாபிஷேகம்
பவித்ரோத்சவம்
ஸ்ரீ ஜெயந்தி
ஊஞ்சல்
சித்திரைத் தேர்

நடைதிறப்பு : காலை 6.00 – 7.30 மற்றும் காலை 9.00 – 12.00, நண்பகல் 1.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை, இரவு 7.00 மணி முதல் 9.00 மணி வரை.

கோவில் முகவரி : அருள்மிகு ரங்கநாதசுவாமி திருக்கோவில்,

ஸ்ரீரங்கம், திருச்சி – 620 006.

தொலைபேசி எண்: +91 – 431 – 2432246.

Recent Post

RELATED POST