அசைவ உணவுகளில் வாசனைக்காகவும் செரிமாணத்திற்க்காகவும் அன்னாசிப்பூ பயன்படுத்தப்படுகிறது. அதில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி பலருக்கும் தெரிவதில்லை.
அன்னாசிப்பூவின் பூர்வீகம் சீனா. சீன ஆயுர்வேத மருத்துவத்தில் அன்னாசி பூ பயன்படுத்தப்பட்டு வருகிறது. பிறகு எல்லா நாடுகளுக்கும் பரவி தற்போது தவிர்க்க முடியாத மசாலா பொருளாக மாறிவிட்டது.
அன்னாசிப்பூவில் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளது. ஆன்டி ஆக்சிடென்ட், வைட்டமின்- ஏ வைட்டமின்-சி போன்ற பல ஊட்டச்சத்துக்கள் உள்ளது.
அன்னாசி பூ எண்ணெய்
அன்னாசி பூவில் தயாரிக்கப்படும் எண்ணெய் சரும அலர்ஜியை சரி செய்கிறது. நரம்புகளை வலுவாக்கவும் ரத்த ஓட்டத்தை சீராக்கவும் இந்த எண்ணெய் உதவுகிறது.
வாயு பிரச்சனை
அன்னாசி பூ லேசான இனிப்பு சுவை கொண்டது. இதனை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் வாயு தொந்தரவு ஏற்படாது. நாம் சாப்பிட்ட உணவுகள் எளிதில் ஜீரணமாகும்.
புளித்த ஏப்பம்
சிலருக்கு சாப்பிட்ட உணவு சரியாக செரிமானம் ஆகாமல் இருந்தால் புளித்த ஏப்பம் ஏற்படும். இந்த பிரச்சனைக்கு அன்னாசி பூ நல்ல மருந்தாக பயன்படுகிறது. அன்னாசிப்பூவை பொடி செய்து அரை கிராம் அளவு எடுத்து தண்ணீரில் கலந்து மூன்று வேளையும் உணவிற்கு பிறகு குடித்து வந்தால் புளித்த ஏப்பம் நீங்கும்.
சளி இருமல்
அன்னாசிப்பூவை வறுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். ஒரு டம்ளர் தண்ணீரில் சீரகம், மிளகு, அரைஸ்பூன் அன்னாசிப்பூ பொடி சேர்த்து கொதிக்க வைத்து சிறிது தேன் கலந்து காலையும் மாலையும் குடித்து வந்தால் சளி, காய்ச்சல், இருமல் விரைவில் குணமாகும்.
தசை வலி
விளக்கெண்ணெய், நல்லெண்ணெய் இரண்டிலும் தலா 100 மில்லி அளவு எடுத்து அதில் அன்னாசி பூ பொடியை கலந்து தைலமாக காய்ச்சவும். இந்த தைலத்தை தசை வலி உள்ள இடத்தில் தடவு வந்தால் தசை வலி, தசைப்பிடிப்பு குணமாகும்.