நட்சத்திர பழத்தில் உள்ள மருத்துவ நன்மைகள் என்ன?

நட்சத்திரப் பழம் புளிப்பும் இனிப்பும் கலந்த சுவையுடன் இருக்கும். இந்தப் பழம் இந்தியாவில் குறைந்த அளவே கிடைக்கும்.

இந்தப் பழத்தின் பூர்வீகம் மலேசியா ஆகும். தற்போது தாய்லாந்து, சிங்கப்பூர். மியான்மர், இந்தோனேசியா ஆகிய நாடுகளில் அதிக அளவு விளைவிக்கப்படுகிறது.

நட்சத்திர பழத்தில் கால்சியம், இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ், துத்தநாகம், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் இருக்கிறது.

இப்பழத்தில் நார்ச்சத்தும் நீர்ச்சத்தும் அதிக அளவில் இருப்பதால் உடல் எடையை குறைக்க விரும்புவோர் இப்பழத்தை அடிக்கடி எடுத்துக் கொள்ளலாம். இப்பழத்தில் உள்ள தாது உப்புக்கள் நரம்பு மற்றும் தசைகளின் செயல்பாட்டை பலப்படுத்துகிறது.

இப்பழத்தில் வைட்டமின் சி அதிக அளவு இருப்பதால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது. இதில் உள்ள வைட்டமின் சி சளி, இருமல், காய்ச்சல், வைரஸ் தொற்று ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கிறது.நட்சத்திர பழத்தில் உள்ள பொட்டாசியம் உயர்ரத்த அழுத்தத்தை சரி செய்து இதயத்தைப் பாதுகாக்கிறது.

பிரசவித்த தாய்மார்களுக்கு இந்த பழம் ஒரு வரப்பிரசாதமாகும். தாய்மார்களே பழத்தை சாப்பிட்டு வருவதால் பால் சுரப்பதற்கு இயற்கையான வழியில் நிவாரணம் பெறலாம்.

அஜீரண கோளாறு உள்ளவர்களுக்கு மூலநோய் பிரச்சனை உருவாகும். இந்த பிரச்சனையிலிருந்து விடுபட நட்சத்திர பழத்தை இரவு உணவுக்குப் பின் இரண்டு துண்டுகள் சாப்பிட்டு வந்தால் மூல நோயின் தாக்கம் குறையும்.

குறிப்பு : சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் இப்பழத்தை தவிர்ப்பது நல்லது

Recent Post