தொழில் முனைவோர்கள் தவிர்க்க வேண்டிய முக்கியமான தவறுகள்

தொழில் முனைவோருக்கு முக்கியமாக இருக்கவேண்டியது நம்பிக்கை, ஆர்வம், நேர்மை, விடாமுயற்சி இதில் அதிக முக்கியமானது முதலீடு.  முதலீட்டு விஷயத்தில்தான் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். மேலும் சில இடங்களில் நாம்  கவனமாக இருக்கவேண்டும், அது எங்கெங்கு என்று பார்போம்.

சிறந்த சந்தைப்படுத்துதல் மூலோபாயம் (Marketing Strategy)

தயாரிப்பதை விட, சந்தைப்படுத்துதல் என்பது மிகமிக முக்கியமானது, பெரும்பலானோர்  சந்தைப்படுத்துதல் திட்டத்தில் ஏதேனும் குறை வைத்து விடுகின்றனர்.  சந்தைப்படுத்துதல் திட்டத்தை முறையாக குறுகிய காலத்திற்கு ஒன்று மற்றும் நீண்ட காலத்திற்கு ஒன்று என்று சூழ்நிலைக்கு ஏற்றவாறு முன்னரே தயார் செய்து கொள்ளவேண்டும், அதற்கு முன்னால் அத்துறையில் உள்ள தொழில்நுட்பங்கள், வேலைப்பார்க்கும் தொழிலாளர்கள், புதுமைகள் அனைத்தையும் கற்று கொள்ளவேண்டும், விடாமல் கற்றுக் கொண்டும் இருக்கவேண்டும்.

தயாரிப்பை வெளியிட தயங்குதல்

எதுவென்றாலும் வெளிவந்து அதில் உள்ள பிரச்சனைகளை சந்தித்தால் மட்டுமே வெற்றி காண முடியும். அதனால் தங்கள் தயாரிப்பை சந்தைப்படுத்துங்கள். அதனை பயன்ப்படுத்தும் பயனர்களிடமிருந்து அவர்களது கருத்துக்களையும் கேட்டு கொள்ளலாம். அதற்கு பிறகு, தங்கள் தயாரிப்பு பயனரை நிறைவுப்படுத்தினால் அதனை இன்னும் மெருகேற்றுங்கள் இல்லையேல் குறைகளை நிவர்த்தி செய்யுங்கள்.

அவசர முடிவுகள்

ஒரு செயலில் யார்யார் என்னென்ன வேலை செய்ய இருக்கிறார்கள், அவர்களது பொறுப்புகள் என்னென்ன என்று தெளிவாக தயாரிக்காமல் அவசரமாக முடிவுகளை எடுப்பது, சில நேரங்களில் மிக பெரிய பிரச்சனைகளை கொண்டுவரலாம், சில நேரம் தவறான பாதைக்கு கொண்டு செல்லலாம். முக்கிய முடிவுகள் எடுக்கும் போது மிக கவனமாகவும், தெளிவாகவும் இருக்கவேண்டும்.

மனம் தளரக் கூடாது

பயனர்களிடமிருந்து வரும் கருத்துக்களை கேட்டு மனம் தளர கூடாது. பயனர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமாக பயன்படுத்துவர், அவர்கள் அவர்களது தனிப்பட்ட கருத்துக்களை முன்வைப்பர். அதில் நல்ல கருத்தும்  வரும் மாற்று கருத்தும் வரும். அணைத்து கருத்துக்களையும் மனதில் ஒரு ஓரமாக வைத்துவிட்டு, தனது அடுத்த கட்டத்திற்கு இடம் பெயர்ந்து கொண்டே இருக்க வேண்டும், இக்கட்டத்தில் உள்ள செயல்பாடுகள் அனைத்தும் பயனர்களை திருப்திப்படுத்தும் அளவிற்க்கு இருக்கவேண்டும்.

கருத்துக்களால் திசை திரும்புவது 

பயனர்களிடமிருந்து வரும் கருத்துக்களை மட்டும் ஏற்று தயாரிப்பை வழிநடத்தாமல் நடுநிலையாக இருந்து பயனர்கள் கருத்துக்கள் மற்றும் உங்களது தயாரிப்பின் தொலைநோக்கு பார்வை  அனைத்தையும் ஒன்று சேர்த்தால்தான் உங்கள் தயாரிப்பை நெடுங்காலத்திற்கு உலக அளவில் அந்நிறுவனத்தை கொண்டு செல்ல முடியும்.

புதிய தொழில் சிந்தனைகள்

சிலர் தனது புதிய தொழில் சிந்தனைகளை மிகவும் நம்புவார்கள், நல்லதுதான், ஆனால் இது முதலில் நான்தான் கண்டறிந்தேன் என்று நினைத்து அதை ரகசியமாக பாதுகாப்பார்கள். இவ்வுலகில் புதிய தொழில் சிந்தனைக்கு பஞ்சம் இல்லை, சிலர் அதனை வெளிக்கொண்டு வர வாய்ப்பு இல்லை, இல்லையேல் வெளிக்கொண்டுவர தெரியவில்லை.

அதற்காக மனம் தளராமல், தங்கள் தொழில் சிந்தனையை எவ்வாறு மக்களுக்கு மிக எளிதாக கொடுக்க முடியும் என சிந்தித்து செயல்ப்பட்டால் வெற்றி கண்டு விடலாம்.

முதல் முயற்சிலே வெற்றி கிட்டாது,  விடமுயற்சிலே வெற்றி கிட்டும்.

Recent Post

RELATED POST