வயிற்றுக் கோளாறுகளை தீர்க்கும் மருத்துவ குறிப்புகள்

ஒரு ஸ்பூன் சீரகத்தை எடுத்து சிறிதளவு நீர்விட்டு அரைத்து நீரில் கலந்து சாப்பிட்டால் வயிற்று உப்புசம் அடங்கும்.

ஒரு துண்டு இஞ்சியை நசுக்கி ஒரு கப் நீரில் போட்டு, பாதியாகும் வரை காய்த்து நீரை மட்டும் வடிகட்டி சாப்பிட வயிற்று உப்புசம், புளி ஏப்பம் குணமாகும்.

ஒரு கரண்டி இஞ்சி சாறுடன், ஒரு கரண்டி கரிசலாங்கண்ணி இலை சாறை கலந்து மூன்று வேளை சாப்பிட வயிற்று வலி குணமாகும்.

வெந்தயக் கீரையுடன் துவரம் பருப்பு சேர்த்து கூட்டு வைத்து சாப்பிட்டால் வயிற்று பொருமல் நீங்கும்.

சிறிதளவு பேய் மிரட்டி இலையை பிழிந்து சாறு எடுத்து, ஒரு கரண்டி சாறை ஒரு கப் தண்ணீரில் கலந்து சாப்பிட வயிற்று வலி தீரும்.

ஒரு வெற்றிலையோடு சிறிதளவு சீரகம், உப்பு இரண்டையும் சேர்த்து சாப்பிட வயிற்று அஜீரணம் நீங்கும்.

ஒரு கரண்டி வெற்றிலைச் சாறு குடிக்க வயிற்று உப்புசம் தீரும்.

சிறிதளவு சீரகம், உப்பு இரண்டையும் சேர்த்து தின்று சிறிதளவு வெந்நீர் குடிக்க வயிற்று வலி குணமாகும்.

எலுமிச்சை சாறில் சிட்டிகை அளவு ஆப்ப சோடா மாவை போட்டு கலக்கி குடித்தால் வயிற்றுவலி குணமாகும்.

சிறிதளவு மிளகு, சீரகம், உப்பு இம்மூன்றையும் எடுத்து நன்றாக அரைத்து வாயில் போட்டு விழுங்கி, சிறிதளவு குடிதண்ணீர்  குடித்து விட்டால், எந்தவித வயிற்று வலியானாலும் உடனே குணமாகும்.

சுக்கை இடித்து தூளாக்கி, அரை கரண்டி தூளை எடுத்து, இதே அளவு சர்க்கரையும் சேர்த்து வாயில் போட்டு கொஞ்சம் தண்ணீர் சேர்த்து விழுங்கினால் வயிற்றுவலி குணமாகும்.

ஐம்பது கிராம் ஓமத்தை எடுத்து ஒரு சட்டியில் போட்டு வறுக்க வேண்டும். சிவக்க வருத்தபின் ஆறவைத்து, நன்றாக உமி போகும் வரை பிசைந்து இதனுடன் பத்து கிராம் பனை வெல்லத்தை சேர்த்து அரைத்து காலை. மாலை சாப்பிட வயிற்று உப்புசம் தீரும்.

சுக்கு, மிளகு, திப்பிலி இவைகளை சம எடை விதம் எடுத்து வறுத்து பொடியாக்கி பசுநெய்யில் கலந்து சாப்பிட்டால் வயிற்று கோளாறுகள் தீரும்.

சிறிதளவு பாகல் இலைகளை எடுத்து பிழிந்து சாறு எடுத்து இத்துடன் சிறிதளவு மிளகுப்பொடி மற்றும் நெய் சேர்த்து குழைத்து சாப்பிட வயிற்று வலி, அஜீரணம், பொருமல் நீங்கும்.

சுடுநீரில் மிளகு பொடியையும், பெருங்காய பொடியையும் கலந்து குடிக்க வாயுக் கோளாறுகள் தீரும்.

ஒரு கரண்டி இஞ்சி சாறுடன், ஒரு கரண்டி துளசி இலை சாறு கலந்து காலை ஒரு கரண்டி வீதம் ஏழு நாட்கள் சாப்பிட வாயுத் தொல்லை தீரும்.

பத்து கிராம் பிரண்டை, பத்துகிராம் ஓமம் இரண்டையும் தட்டி ஒரு சட்டியில் போட்டு இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு, ஒரு டம்ளராக சுண்டும் அளவிற்கு காய்த்து ஒரு நாள் மூன்று வேலை மூன்று கரண்டி விதம் குடித்து வர, அஜீரண வயிற்று போக்கு குணமாகும்.

இள முருங்கை மரத்தின் பட்டையை 200 கிராம் அளவுக்கு எடுத்து, ஒரு லிட்டர் நீர்விட்டு கால்பாகமாக சுண்டக்காய்த்து அதில் கால் லிட்டர் விளக்கெண்ணெய் சேர்த்து நீர் சுண்டும் வரை காய்த்து வடி கட்டி, காலையில் அரை அவுன்ஸ் விதம் சாப்பிட வாயுக்  கோளாறு தீரும்.

Recent Post

RELATED POST