ஸ்ட்ராபெரி பழத்தில் உள்ள நன்மைகள்

ஸ்ட்ராபெர்ரி பழத்தில் ஏராளமான நன்மைகள் உள்ளன. செல் அழிவை தடுக்கும் ஆன்டி ஆக்சிடன்ட் பொருட்கள் ஸ்ட்ராபெரி பழத்தில் உள்ளது.

ஸ்ட்ராபெரி பழம் சாப்பிடுவதால் உடல் குளிர்ச்சி அடையும். இழந்த நீர்ச்சத்தை ஈடு செய்யவும், தோலின் வறட்சியைப் போக்கவும் பயன்படுகிறது.

ஸ்ட்ராபெரி பழத்தில் இருந்து எடுக்கப்படும் நறுமண பொருட்கள் சாக்லேட், கேக், ஐஸ்கிரீம் போன்ற உணவுப்பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது.

ஸ்ட்ராபெரி பழம் சாப்பிடுவதால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து மாரடைப்பு மற்றும் புற்றுநோய் வருவதை தடுக்கும். மேலும் இது உடலில் உள்ள ரத்த சிவப்பணுக்களை அதிகமாக உற்பத்தி செய்யும்.

ஸ்ட்ராபெர்ரி ஜூஸ் குடிப்பதால், அதில் உள்ள அமிலங்கள் பற்களில் ஏற்படும் கறைகளை நீக்கி விடும்.

ஸ்ட்ராபெரி பழத்தில் “வைட்டமின் ஏ” உள்ளதால் இதனை சாப்பிடுபவர்களுக்கு தலைமுடி கொட்டுதல், பொடுகு தொல்லை, தலைமுடியில் ஈரப்பதம் இல்லாமை, இளநரை போன்ற பிரச்சனைகள் நீங்கும்.

ஸ்ட்ராபெரி பழத்தில் உள்ள சத்துக்கள்

  • வைட்டமின் சி
  • வைட்டமின் ஏ
  • வைட்டமின் கே
  • தையமின்
  • ரிபோபேளேவின்
  • நியாசின்
  • பேன்டோதெனிக் அமிலம்
  • போலிக் அமிலம்
  • சையனோகோபாலமின்
  • டோக்கோபெரால்
  • செம்பு
  • மாங்கனிஸ்
  • அயோடின்
  • பாஸ்பரஸ்
  • மெக்னீசியம்
  • கால்சியம்

பல சத்துக்கள் உள்ள இப்பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருவது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.

Recent Post

RELATED POST