சிறுநீரகம் மற்றும் கல்லீரலை பாதுகாக்கும் கரும்பு சாறு

கரும்பில் இயற்கையாக உள்ள அல்கலைன் என்னும் பொருள், புற்றுநோயை குணப்படுத்தும் தன்மையுடையது. குறிப்பாக பெருங்குடல், நுரையீரல் அல்லது மார்பக புற்றுநோய் போன்றவற்றிற்கு சிறந்தது.

கரும்புச்சாறை அடிக்கடி குடித்து வந்தால் உடலில் தீங்கு விளைவிக்கும் நச்சுக்கள் நீங்கி உடல் தூய்மை பெறும். இதனால் உங்கள் உடல் எடை படிப்படியாக குறைய வழிவகுக்கிறது.

கரும்புச் சாறு உடலுக்கு உடனடியாக ஆற்றலை தரும். வெயில் காலங்களில் அதிக தாகம் எடுக்கும் போது கெமிக்கல் கலந்த பானங்களை தவிர்த்து கரும்பு சாற்றை சாப்பிட்டு பாருங்கள். அது உங்களுக்கு புத்துயிர் அளிக்கும்.

கரும்புச் சாறில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இதனால் தொண்டை புண் மற்றும் வயிற்று புண் குணமாக உதவுகிறது.

கரும்புச் சாறு உடலில் உள்ள நீர்சத்து குறையாமல் தடுக்கிறது. இதனால் இதயம் மற்றும் நுரையீரலுக்கு பலம் அளிக்கிறது.

கரும்புச் சாறில் உள்ள பொட்டாசியம் உங்கள் வயிற்றில் சமன் செய்ய உதவுவதோடு செரிமானத்துக்கும் உதவுகிறது.

சிறுநீர் பாதை நோய்த்தொற்றை தடுப்பதற்கும் சிறுநீரகங்கள் சிறப்பாக செயல்படவும் உதவுகிறது.

கரும்புச் சாற்றில் எலுமிச்சை, இஞ்சி சேர்ப்பது கூடுதல் பலன் தரும். இதுவும்கூட ஒரு வகையில் ரத்தத்தில் சர்க்கரை அதிகரிப்பதைக் குறைக்கும்.

கல்லீரலில் உள்ள நச்சுக் கழிவுகளை வெளியேற்ற கரும்பு சாறு உதவுகிறது. கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துவதால் மஞ்சள் காமாலையை வராமல் பாதுகாக்கிறது.

Recent Post

RELATED POST