வெயில் காலத்தில் உங்கள் சருமத்தை பாதுகாக்க சில டிப்ஸ்

மாலை குளியலால் நாள் முழுவதும் ஏற்பட்ட வெயிலின் தாக்கம், அசதி, அலுப்பு குறையும். மாலையில் எண்ணெய் தேய்த்து குளித்தால் தூக்கம் நன்றாக வரும்.

காலையில் எண்ணெய் தேய்த்து குளித்துவிட்டு வெயிலில் அலைந்தால் தலைவலி உருவாக்கும்.

வெயில்காலத்திற்கு ஏற்ற உணவுகளான இளநீர், நுங்கு, தர்பூசணி, வெள்ளரி பிஞ்சு, முலாம்பழம் போன்ற உணவுகளை மதிய உணவுக்கு பிறகு சாப்பிடுவது நல்லது. இந்த உணவுகள் உடலுக்கு நன்மை செய்வதுடன் சருமத்திற்கு ஆரோக்கியம் மற்றும் பளபளப்பை தருகிறது. இதை தினமும் சாப்பிடுவது நல்லது.

ஆவி பிடிப்பதால் முகத்தில் உள்ள முகத்துவாரங்கள் விரிவடைந்து அழுக்குகள் வெளியேறும். முகத்தில் எண்ணெய் பசை உள்ளவர்கள் தாராளமாக 10 நிமிடம் ஆவி பிடிக்கலாம்.

சீரகம், ஓமம், கார்போக அரிசி இவற்றை தேங்காய் பாலில் அரைத்து உடலில் பூசிக் குளித்தால் கோடை காலத்தில் ஏற்படும் கொப்புளம், கட்டிகள், வேர்க்குரு மறையும்.

கோடை காலங்களில் மாங்காய், மாம்பழம் அதிகம் உண்பதை தவிர்க்கவும்.

கோடை காலங்களில் ஏற்படும் உடல் அரிப்பை தடுக்க அருகம்புல் சாரு மூலம் தயாரிக்கப்படும் அருகம்புல் தைலத்தை பூசினால் அரிப்பு குறையும்.

Recent Post

RELATED POST