வெயில் காலத்துக்கு ஏற்ற அலங்காரம்…முதலில் செய்ய வேண்டியது இதுதான்

பருவங்கள் மாறும் போதெல்லாம், பருவத்திற்கேற்ப அலங்காரமும் மாற வேண்டும். அப்போது அது பொருத்தமாக இருக்கும். வெயில் காலத்திற்கேற்ப அலங்காரம் செய்தால், நீங்கள் அழகாக தோன்றுவீர்கள்.

வெயில் காலத்தில் எளிமையான அலங்காரம் தான் அழகை தருகிறது. மிகுந்த தீவிரமாக அலங்காரம் செய்வது எடுபடாது, மேலும் சில நேரங்களில் சிரமமாகவும் தோன்றும்.

வெயில் காலத்தில் முதலில் செய்ய வேண்டியது, காலை மற்றும் மாலை இரு முறையும் குளிக்க வேண்டும். இதனால், உடல் வியர்வை நாற்றம் இல்லாமல், சுத்தமாகவும், குளிர்ச்சியாகவும் இருக்கும்.

குளித்த பிறகு, கழுத்து, முதுகு, மார்பு போன்ற பகுதிகளில் சிறிது பவுடரை எடுத்துப் பூசுங்கள். இது வியர்க்காமல் இருக்க உதவும். மாலை நேரத்தில் அதிக அலங்காரம் தேவையில்லை. முகத்தில் சிறிது பவுடர் பூசினால் போதுமானது.

உடையில் கவனம் செலுத்துவது முக்கியம். வெயில் காலத்திற்கு பருத்தி ஆடைகள் சிறந்தவை. நைலான் போன்ற செயற்கை நூல்களை அணிந்தால் காற்றோட்டம் குறைவாக இருக்கும்.

வெயிலில் வெளியே செல்ல வேண்டாம். வெளியே செல்ல வேண்டியிருந்தால், குடையை எடுத்துச் செல்லுங்கள். குறிப்பாக, கருப்பு வண்ணக் குடையை தவிர்க்க வேண்டும்.

Recent Post

RELATED POST