முகப்பருக்களை நீக்கி, சேதமடைந்த தோல்களை சரி செய்யும் சூரியகாந்தி

சூரியகாந்தி எண்ணெய் நமது உடலுக்கு நன்மை கொடுக்கும் என்பதை அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இதன் விதையில் அதிக கொழுப்பு சத்துகள் இருக்கிறது. இந்த கொழுப்பு சத்து இதயத்தில் அடைப்பு உண்டாக்காது. சூரியகாந்தி விதையிலும், அதனுடைய எண்ணெயிலும் நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் அடங்கியிருக்கிறது. இதனால் தான் சூரியகாந்தி எண்ணெயை சமையலுக்கு பயன்படுத்துகின்றனர்.

சூரியகாந்தி விதைகளில் அதிக நார்சத்து இருப்பதால், நமது ரத்தத்தில் ஏற்படும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. மேலும் மன அழுத்தம் போன்றவற்றை குறைக்கிறது. மன அழுத்தத்தை உண்டாக்கக் கூடிய கார்டிசால் ஹார்மோனை குறைக்கிறது. இதனால் இரவு நேரங்களில் நிம்மதியான தூக்கம் நமக்கு கிடைக்கிறது. மேலும் சூரியகாந்தி விதையில் புரத சத்து அதிகமாக இருக்கிறது.

முகப்பருக்களை நீக்கி, சேதமடைந்த தோல்களை சரி செய்யும் தன்மை சூரியகாந்தி எண்ணெய் உண்டு. இது தவிர இதய பிரச்சனை மற்றும் அழற்சி போன்றவற்றை எதிர்த்து போராடும். மேலும் ஜீரண சக்தியை அதிகரிக்கிறது.

1970 களில் அமெரிக்க மற்றும் ஐரோப்பாவில் அதிகளவில் சூரியகாந்தி, சோயா போன்றவை உற்பத்தி செய்யப்பட்டது. இதனை இந்தியாவிற்கு சந்தைப்படுத்த திட்டமிட்டனர். இதனால் நாம் பாரம்பரியமாக பயன்படுத்தி வந்த கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்றவை கெடுதல் என விளமபரம் செய்து மக்கள் மனதில் பதிய வைத்தனர். இதனால் அப்போது சூரியகாந்தி விற்பனை அமோகமாக விற்பனை செய்யப்பட்டது. இந்த எண்ணெய் அப்போது சூரியகாந்தி எண்ணெயில் இருந்து சுத்தமாக எடுக்கப்பட்டது. ஆனால் தற்போது பல வேதிப்பொருட்களினால் கலப்படம் செய்கின்றனர். சூரியகாந்தி எண்ணெய் உற்பத்தி செய்யும் அளவை விட மிக மிக குறைந்த அளவே சூரியகாந்தி பூக்கள் பயிரிடப்படுகின்றன.

இந்நிலையில் உலகளவில் கடந்த ஓராண்டாக சூரியகாந்தி உற்பத்தி பாதியாக குறைந்துவிட்டது. ஆனால் சூரியகாந்தி எண்ணெய் அதிகளவு உற்பத்தி செய்கிறார்கள், அது எப்படி என தெரியவில்லை.

எண்ணெயில் கலப்படம்

நமது பயன்படுத்தும் பாமாயிலில் சில கெமிக்கல் சேர்த்து சூப்பர் ஒலின் என்ற எண்ணெயை எடுக்கப்படுகிறது. இந்த எண்ணெய் நீர் போல் இருக்கும் நீர் போல இருக்கும் எண்ணெயை கலப்படம் இல்லாத எண்ணெய் கலந்தால் போலி எண்ணெய் என்று கண்டுபிடிக்க முடியாது. நம் பயன்படுத்தும் சூரிய காந்தி எண்ணெயில் 20 சதவீதம் சூரியகாந்தி எண்ணெய் இருக்கும். இதர 80 சதவீதம் கலப்படம் தான். இப்போது நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள்… எண்ணெய் பொருட்களை அதிகமாக பயன்படுத்தலாம? வேண்டாமா என்று.

Recent Post

RELATED POST