இதய நோய்களின் அபாயத்தை குறைக்கும் சூரியகாந்தி விதை

நம் உடலுக்கு தேவையான ஏராளமான சத்துக்கள் சூரியகாந்தி விதைகளில் உள்ளது. அதனால்தான் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் எண்ணெய்களில் முக்கியமானதாக இருந்து வருகிறது.

அசுத்தமான காற்றை சுத்தப்படுத்தும் தன்மை கொண்டுள்ளதால் சூரியகாந்தி செடியை வீடுகளில் வளர்க்கலாம். சூரியகாந்தி விதையில் செலினியம், மக்னீசியம், தாமிரம், பொட்டாசியம், வைட்டமின் ஈ , வைட்டமின் பி6, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் ஆகியவை அடங்கியுள்ளது.

sunflower seeds uses in tamil

100 கிராம் சூரிய காந்தி விதையில் புரதம் 24 கிராம், கொழுப்பு 52 கிராம், ஃபைபர் 100 கிராம், கார்போஹைட்ரேட் 7 கிராம் உள்ளது.

Advertisement

சூரியகாந்தி விதையில் துத்தநாகம், செலினியம் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் இருப்பதால் நோய் எதிர்ப்பு மண்டலத்தை சரியாக வேலை செய்ய வைக்கிறது. இதனை தினமும் உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.

சூரியகாந்தி விதைகளில் உள்ள ஃபைபர், வைட்டமின் ஈ ஆகியவை இதய நோய்களின் அபாயத்தை குறைக்கும். இதயத்தில் நல்ல கொழுப்பை சேர்த்து கெட்ட கொழுப்பை கரைக்கும்.

சூரியகாந்தி விதைகளில் பொட்டாசியம் வளமாக இருப்பதால் அவற்றை தொடர்ந்து உட்கொள்ளும் போது உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படுகிறது.

கல்லீரல் செயல்பாட்டை பாதிக்கும் ‘கிளைகோஜன்’ அளவை கட்டுக்குள் வைப்பதற்கு சூரிய காந்தி விதை உதவுகிறது.