சுரைக்காய் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

சுரைக்காய் ஜூஸில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளது. சுரைக்காயில் நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் இருக்கிறது. சுரைக்காய் சாறு சக்திவாய்ந்த (nutraceutical) நியூட்ரிக்ஸ் ஆக உதவுகிறது.

கார்போஹைட்ரேட், வைட்டமின்கள், மினெரல்ஸ் போன்ற முக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.

சுரைக்காய் சாறு குடித்து வந்தால் நமது இதய ஆரோக்கியம் மேம்படும். செரிமான பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை அளிக்கும். சுரைக்காயில் 80 சதவீதத்துக்கும் மேல் தண்ணீர் மட்டுமே உள்ளது.

சுரைக்காய் ஜூஸில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப் போக்கை சரிசெய்கிறது.

இன்சோம்னியா (insomnia) மற்றும் வலிப்பு நோய்க்கு சுரைக்காய் ஜூஸ் சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

சுரைக்காய் சாறு தொடர்ந்து குடிப்பதால் இருதய தொடர்பான நோய்கள் குறைக்க கொடுக்கப்படும். உடம்பில் உள்ள அதிகளவு கொலஸ்ட்ரால் குறைக்க உதவுகிறது.

இந்த சுரைக்காய் ஜூஸ் சருமப் புற்றுநோய்க்கு சிறந்த மருந்தாக கண்டறியப்பட்டு உள்ளது. புற்றுநோய் செல்களைத் தாக்கி அழிக்கவும் எதிர்த்துப் போராடவும் உதவுகிறது.

சுரைக்காய் ஜூஸ் அஜீரணக் கோளாறுகளுக்கு சிறந்த தீர்வாக இருக்கிறது.
சுரைக்காயில் உள்ள நார்ச்சத்து, மலச்சிக்கல் மற்றும் மூல நோயை குணபடுத்தும். சுரைக்காய் விதைககள் செரிமான மண்டலத்தை தூய்மைப்படுத்தும்.

சுரைக்காய் சாறு உடல் ஏற்படும் வலியை தணிக்கும். சுரைக்காய் ஜூஸில் நெல்லிக்காய் மற்றும் இஞ்சி, எலுமிச்சை, மிளகு, சிறிது உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் குடிக்கலாம்.

Recent Post