நாகப்பட்டினம் தாமரையாள் கேள்வன் திருக்கோயில் வரலாறு

ஊர்: பார்த்தன் பள்ளி

மாவட்டம்: நாகப்பட்டினம்

மாநிலம் : தமிழ்நாடு.

மூலவர் : தாமரையாள் கேள்வன்

தாயார் : தாமரை நாயகி

தீர்த்தம்: கட்க புஷ்காரிணி

சிறப்பு திருவிழாக்கள்: வைகுண்ட ஏகாதசி, ராமநவமி.

திறக்கும் நேரம்: காலை 6:00 மணி முதல் 10:00 மணி வரை, மாலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை.

தலவரலாறு

பஞ்ச பாண்டவர்கள் வனவாசம் சென்றபோது, அர்ஜுனன் தாகத்திற்கு தண்ணீர் தேடி அலைந்தான். அப்போது அகத்தியர் தியானத்தில் இருந்ததை கண்டு அவரது தியானத்தைக் கலைத்து, தனக்கு தண்ணீர் தருமாறு கேட்டு அவரது அனுமதி பெற்று கமண்டலத்தை திறந்தான். ஆனால் அதில் ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லை. அவன் முகம் வாடியது இதைக் கண்ட அகத்தியர்.

”அர்ஜுனா! நீ எப்போது வேண்டினாலும் கொடுக்கும் தெய்வமான கிருஷ்ணரிடம் கேட்டிருக்க வேண்டும் என்றார். பின் அர்ஜுனர் மனத் தெளிவு பெற்று, கிருஷ்ண கிருஷ்ணா என அழைத்தார் கிருஷ்ணர் அவன் முன் தோன்றி கையிலிருந்த கத்தியை அவனிடம் கொடுத்து, இந்த கத்தியை வைத்து நீ எந்த இடத்தில் தோண்டினாலும் தண்ணீர் வரும் எனக் கூறினார். அவ்வாறே செய்தார் தண்ணீரும் கிடைத்தது. இந்நிகழ்ச்சி நடந்த இடம் பார்த்தன்பள்ளி என புராணம் கூறுகிறது

பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் இது 40 வது திவ்ய தேசம். தசரதர் குழந்தை வரம் வேண்டி புத்திரகாமேஷ்டி யாகம் செய்தார். அப்போது அவருக்கு பெருமாள் தான் தனக்கு மகனாக அவதரிக்கப் போகிறார் என்று அறிந்தார். இருந்தும் அவருக்கு நம்பிக்கை இல்லாமல், பெருமானிடம் வேண்டினார் அப்போது “ராமர்’ யாககுண்டத்தில் இருந்து காலை தூக்கி எழுந்து வருவது போல இரு தேவியருடன் காட்சி கொடுத்தார். அர்ஜுனனுக்கு இங்கு தனி சன்னதி உள்ளது. புத்திரபாக்கியம் வேண்டி இத்தல இறைவனிடம் பிரார்த்திக்கிறார்கள்.