புளியம் பூவின் மருத்துவ நன்மைகள்

பொதுவாக நாம் புளிய மரத்தின் பழத்தை மட்டுமே பயன்படுத்தி வருகிறோம். ஆனால் புளிய மரத்தின் இலை, பூ பிஞ்சு, காய், பழம், விதை, பட்டையாவுமே மருத்துவத்தில் பயன்பட்டு வருகின்றன. இங்கு புளியம்பூவின் பயனை மட்டும் பார்ப்போம்.

100 கிராம் புளியில் உடலுக்கு தேவைப்படுகின்ற இரும்புச்சத்து இருக்கிறது, 50 வயது வரை ஒரு நாளைக்கு 100 கிராம் புளி சாப்பிடலாம்.

எலும்பு தேய்மானத்தை குறைக்கும் தன்மை புளிக்கு உள்ளது. உடலின் ரத்த ஓட்டம், நோய் எதிர்ப்பு ஆற்றல், ஜீரண கோளாறுகள் இவைகளை சீர்செய்ய புளி தேவைப்படுகிறது. மேலும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது.

உடலில் தேவையற்ற கொழுப்புகளை கரைக்கும் சக்தி புளிக்கு உண்டு. கால்களில் உண்டாகும் வீக்கம், கீல்வாதம், நீர்த்தேக்கம் இவைகளை குணப்படுத்தும் தன்மை புளிக்கு உண்டு.

கீல்வாதம் குணமாக

புளியம் பூவையும், புளிய இலையையும் சமமாக எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு சட்டியில் சிறிதளவு சிற்றாமணக்கு எண்ணெய் விட்டு, அடுப்பில் வைத்து எண்ணெய் சூடேறியதும் அதில் புளிய இலை மற்றும் பூக்களைப் போட்டு நன்றாக வதக்கி எடுத்து, தாங்கும் அளவில் சூட்டோடு வலி இருக்கும் இடத்தில் ஒத்தடம் கொடுத்தால் வலி மறையும். வீக்கம் இருந்தால் இந்த இலையை வைத்து கட்டிவிட வேண்டும். இவ்வாறு தினமும் காலையும் மாலையும் செய்துவர விரைவில் குணம் கிடைக்கும்.

அஜீரணம் குணமாக

புளியம்பூவை இரண்டு கைப்பிடியளவு எடுத்து சுத்தம் செய்து, ஒரு சட்டியில் போட்டு அதில் ஒரு தம்ளர் தண்ணீர் விட்டு, அரைத் தம்ளர் ஆகும்வரை சுண்டக் காய்ச்சி, இறக்கி வடித்து அதனுடன் சிறிதளவு வெல்லம் சேர்த்து ஒருவேளை மட்டும் சாப்பிட்டால் போதும் அஜீரணம் மாறி பசி ருசி உண்டாகும்.

பித்தம் தணிய

கைப்பிடி அளவு புளியம்பூ எடுத்து சுத்தம் செய்து அதே அளவு புளியங் கொழுந்தும் சேர்த்து அம்மியில் வைத்து உப்பு, சிறிதளவு மிளகாய் சேர்த்து துவையலாக அரைத்து சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் பித்த சம்பந்தமான எல்லா வியாதிகளும் குணமாகும்.

கண்நோய், கண்சிவப்பு குணமாக

சிறிதளவு புளியம்பூவைச் சேகரித்துக் கொள்ள வேண்டும். சுத்தமாகக் கழுவிய அம்மி அல்லது கல்லில் வைத்து நன்றாக அரைத்து, கண்களைச் சுற்றி கனமாக பற்று போட்டு வர வேண்டும். காலையில் இந்தப் பற்றினைக் கழுவி விட்டு, மீண்டும் புதிதாகப் பற்று போட வேண்டும். இவ்வாறு செய்தால் மூன்றே நாட்களில் கண் நோய் குணமாகும். கண்சிவப்பும் மாறிவிடும்.

Recent Post

RELATED POST