இன்றைய ராசிபலன்கள் – ஞாயிற்றுக்கிழமை (09/08/2020)

மேஷம்

இன்று நீங்கள் கடினமான சூழ்நிலைகளை சந்திப்பீர்கள். அதிகப்படியான பணிச்சுமை காணப்படும். உங்கள் பணிகளை திட்டமிட்டு செய்து முடிக்க வேண்டும். நிதி நிலைமை குறைவாக இருக்கும். தோல் வலி ஏற்படலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

ரிஷபம்

Advertisement

இன்றைய தினம் உங்களுக்கு சாதகமாக செல்லும். பணியிடத்தில் சவால்கள் நிறைந்திருக்கும். நல்ல பலன்கள் கிடைக்க நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும். குடும்பத்தாரிடம் அனுசரித்து நடந்து கொள்வீர்கள். பணவரவு மற்றும் ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும்.

மிதுனம்

இன்று நீங்கள் உற்சாகமாக காணப்படுவீர்கள். உங்களிடம் நல்ல முன்னேற்றம் காணப்படும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். பணிகளை திறமையாக செய்து முடிப்பீர்கள். ஆரோக்கியம் மற்றும் பண வரவு நன்றாக இருக்கும்.

கடகம்

இன்று நீங்கள் ஆன்மிக வழிபாடு செய்வது நல்லது. இன்றைய தினம் உங்களுக்கு சாதகமாக இருக்காது. பணிகளை கவனமாக செய்து முடிக்க வேண்டும். தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

சிம்மம்

உங்களுடைய பணிகளை திட்டமிட்டு செய்வதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும். பணி செய்யும் இடத்தில் அனுசரித்துப் போவது நல்லது. குடும்பத்தில் தேவையற்ற சண்டை ஏற்படலாம். தேவையற்ற செலவுகள் காணப்படும். கண் எரிச்சல் ஏற்படலாம்.

கன்னி

இன்று நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நீங்கள் எடுக்கும் முக்கிய முடிவுகள் நல்ல பலனை தரும். பணிகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். குடும்ப உறவில் மகிழ்ச்சி நீடிக்கும். பணவரவு மற்றும் ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும்.

துலாம்

இன்று உங்களுடைய விருப்பங்கள் நிறைவேறும். முக்கிய முடிவுகள் நல்ல பலனை தரும். பணியிடை சூழல் உங்களுக்கு சாதகமாக அமையும். குடும்பத்தில் நல்ல புரிந்துணர்வு ஏற்படும். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

விருச்சிகம்

இன்று நீங்கள் பொறுமையுடனும் நம்பிக்கையுடனும் இருக்க வேண்டும். பணிச்சுமை அதிகமாக காணப்படும். உங்கள் பணிகளை கவனமாக செய்து முடிக்க வேண்டும். குடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்படலாம். பணவரவு மற்றும் ஆரோக்கியம் சுமாராக இருக்கும்.

தனுசு

இன்று நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் புத்திசாலித்தனத்தை பயன்படுத்துவீர்கள். பணி நிமித்தமாக பயணம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நீடிக்கும். தூரத்தில் இருந்து வரவேண்டிய பணம் உங்களுக்கு கிடைக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

மகரம்

இன்று நீங்கள் மன உறுதியுடன் காணப்படுவீர்கள். உங்கள் இலக்குகளை எளிதில் அடைவீர்கள். ஊழியர்களிடம் ஆதரவு ஏற்படும். பணப்புழக்கம் அதிகமாக காணப்படும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

கும்பம்

இன்று நீங்கள் எந்த செயலையும் செய்வதற்கு முன்பு நன்றாக யோசித்துச் செய்ய வேண்டும். பணிகளை குறித்த நேரத்தில் செய்து முடிப்பதில் சிரமம் ஏற்படும். பணிச்சுமை அதிகம் காணப்படும். தேவையற்ற செலவுகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

மீனம்

இன்று நீங்கள் சற்று கவலையோடு காணப்படுவீர்கள். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும்.பணிச்சுமை அதிகம் காணப்படும். பணப்பற்றாக்குறை ஏற்படலாம். ஆரோக்கியத்தில் எந்த குறைபாடும் இருக்காது.