நரைமுடியை கருமையாக்கும் டீ தூள் ஹேர் டை – எப்படி பயன்படுத்துவது?

ஊட்டச்சத்து பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இளம் வயதிலேயே பலருக்கு நரைமுடி வந்து விடுகிறது. இதற்கு கெமிக்கல் ஹேர் டை பயன்படுத்துவதற்கு பதிலாக சில எளிமையான வீட்டு வைத்திய முறைகளைப் பயன்படுத்தி இளநரை பிரச்சனையை சரிசெய்யலாம்.  அந்த வகையில் டீ தூளை வைத்து இளநரை பிரச்சினையை எப்படி சரி செய்யலாம் என்பதை பார்ப்போம்.

டீ தூள் தலைமுடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கவும் இளநரை பிரச்சினைகளைச் சரிசெய்யவும் உதவி செய்யும். NCBI ஆய்வின்படி, டீ தூளில் கேட்டசின்கள் என்னும் ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் அதிகமாக இருக்கின்றன.

டீ கன்டிஷ்னர்

அரை லிட்டர் தண்ணீரில் 2 ஸ்பூன் டீ தூளை போட்டு கொதிக்க விட்டு பின் ஆறவிடுங்கள். இது நன்கு ஆறியதும் வடிகட்டினால டீ கன்டிஷ்னர் ரெடி. தலைக்கு ஷாம்பு போட்டு குளித்த பிறகு கன்டிஷ்னருக்கு பதிலாக இந்த டீ டிக்காஷனை ஊற்றி தலையை அலசலாம்.

மருதாணி பவுடர்

நன்கு திக்கான டீ டிக்காஷனை மருதாணி பவுடரோடு கலந்து நன்கு கெட்டியான பேஸ்ட்டாகக் கலந்து தலையில் அப்ளை செய்து 20-30 நிமிடங்கள் வரை வைத்திருந்து பின் தலையை அலசிக் கொள்ளலாம். இது இளநரையைக் குறைத்து முடியை கருப்பாக மாற்ற உதவுவதோடு முடியை நீளமாக வளரவும் உதவி செய்யும்.

தயிர் மற்றும் டீ தூள்

தயிர் மற்றும் டீ தூள் இரண்டையும் சம அளவு எடுத்து அதோடு 1 ஸ்பூன் அளவு தேன் கலந்து தலைமுடியில் மாஸ்க்காக அப்ளை செய்யுங்கள்.

20 நிமிடங்கள் கழித்து மென்மையான ஷாம்பு கொண்டு தலைமுடியை அலசுங்கள்.வாரத்தில் ஒருமுறை இவ்வாறு செய்து வரும்போது முடி பளபளப்பாக இருப்பதோடு நீளமாகவும் கருமையாகவும் வளரும்.