உங்களின் பற்கள் வலுவாக இருக்க சில டிப்ஸ்

உணவு உண்ட பிறகு வாயை நன்றாக கொப்பளித்து, பற்களிலும், வாயில் உட்பகுதியிலும், ஒட்டிக் கொண்டிருக்கும் உணவுத் துணுக்குகளை வெளியேற்ற வேண்டும்.

உணவை எப்போதும் நன்றாக மென்று சாப்பிட வேண்டும். சரியான பற்பசை, நல்ல பிரஷ் கொண்டு பற்களை, காலையிலும் இரவிலும் துலக்குவது நல்லது.

ஆப்பிள், ஆரஞ்சு, கொய்யா பழம், கேரட், பட்டாணி போன்றவற்றை அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை பற்களை சுத்தம் செய்யும். அதோடு பற்கள் பலமடைய உதவியாக இருக்கும்.

பற்களில் சிறு குழி விழுந்தாலும் அதை அலட்சியம் செய்ய வேண்டாம். இல்லை என்றால் கடைசியில் அந்தப் பல்லை எடுக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். வெற்றிலை, பாக்கு, பீடா போடும் பழக்கம் உள்ளவர்கள் அதை சுவைத்து முடித்தவுடன், நன்றாக கொப்பளித்து விட வேண்டும்.

பல் ஈறுகளில் வலி ஏற்பட்டால், உடனே பல் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது. பற்களை தேய்த்து முடித்தவுடன், கை விரல்களால் மென்மையாக தேய்த்துக் கொடுங்கள்.

குழந்தைகள் அதிக அளவில் இனிப்பு வகைகளை சாப்பிடுவார்கள். அவர்களுக்கு நன்றாக பல் தேய்த்து விடுவதன் மூலம், கிருமிகளை அகற்றி, பல் சொத்தை, பற்கள் விழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை பிரஷ்ஷை மாற்ற வேண்டும். சிலர் ஒரு பிரஷ்ஷை மூன்று அல்லது நான்கு மாதத்திற்கு பயன்படுத்துவார்கள். இது முற்றிலும் தவறு. பற்களை முறையாக பராமரித்து பாதுகாத்து வந்தால் 90 வயதிலும் பற்கள் வலிமையாக இருக்கும்.

Recent Post

RELATED POST