ஏ.ஆர்.ரகுமானை இழிவுபடுத்திய தெலுங்கு நடிகர். கொந்தளித்த ரசிகர்கள்

பிரபல தெலுங்கு நடிகரும் அரசியல்வாதியுமான நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா தனியார் தெலுங்கு ஊடகத்திற்கு பேட்டியளித்தார். அதில் ஏ.ஆர். ரகுமான் பற்றிய கேள்விக்கு அவர் யார் என்றே எனக்கு தெரியாது என்று கூறியுள்ளார்.

பாரத ரத்னா போன்ற விருதுகள் என்.டி.ஆரின் கால் விரலுக்கு சமம் என்றும் எந்தவொரு உயரிய விருதும் தன்னுடைய குடும்பம் தெலுங்கு திரையுலகிற்கு செய்த நன்மைக்கு ஈடாகாது, என்றும் கூறியுள்ளார்.

நடிகர் பாலகிருஷ்ணாவின் இந்த சர்ச்சை பேச்சு சமூக வலைதளங்களில் வெளியாகியதோடு அவருடைய கருத்துக்கு கடும் கண்டனங்களும் எழுந்து வருகின்றன.

Advertisement

பாலகிருஷ்ணா தன் படங்களுக்கு இசையமைக்க ஏ.ஆர்.ரகுமானை அணுகியதாகவும் அவர் மறுத்ததால் இவ்வாறு பேசியிருக்கலாம் என கூறப்படுகிறது.