இந்தியில் ரீமேக் ஆகிறது அருண் விஜய் நடித்த ‘தடம்’

கடந்த 2019-ம் ஆண்டு அருண் விஜய் நடிப்பில் வெளியான ‘தடம்’ திரைப்படத்திற்கு வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்தப்படத்தை மகிழ் திருமேனி இயக்கியிருந்தார். தன்யா ஹோப், ஸ்மிருதி வெங்கட், வித்யா பிரதீப் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

tamil cinema news

இந்த படம் தெலுங்கில் ‘ரெட்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. தெலுங்கிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் தடம் படத்தை இந்தியில் ரீமேக் செய்ய முடிவு செய்துள்ளனர். அதில் பிரபல பாலிவுட் நடிகர் ஆதித்யா ராய் கபூர் அருண் விஜய் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

அறிமுக இயக்குனர் வர்தன் கேட்கர் இந்த படத்தை இயக்கவுள்ளார். மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளது.

Advertisement