தாய்ப்பால் கட்டிக் கொள்ளும் விஷயம் ஒரு சாதாரணமானது என்றாலும், தற்போது உள்ள பெண்களுக்கு அதிகமாக இந்த பிரச்சனை ஏற்படுகிறது. குழந்தைகள் சரியாக பால் குடிக்காமல் இருத்தல், குழந்தைகளுக்கு தாய்மார்கள் பால் தராமல் தவிர்த்தல் போன்றவை இதற்கு காரணமாக உள்ளன.
இந்த விஷயத்தை தவிர்த்து வந்தால், அறுவை சிகிச்சை செய்யும் அளவிற்கு விபரீதம் ஆகலாம். எனவே, தாய்ப்பால் கட்டிக் கொண்டால் என்ன செய்ய வேண்டும் என்பதை தற்போது பார்க்கலாம்.
3 முக்கிய டிப்ஸ்கள்:-
உருளைக்கிழங்கை சிறிய அளவில் சீவிக் கொண்டு, தாய்ப்பால் கட்டிக் கொண்டு இருக்கும் இடத்தில் வைக்க வேண்டும். பிறகு, அந்த இடத்தை, சிறிய துணியை கொண்டு இருக்கமாக கட்ட வேண்டும். பிறகு, ஒரு மணி நேரத்திற்கு அப்படியே இருக்க வேண்டும். இப்படி செய்து வந்தால், பால் கட்டிக் கொள்ளும் பிரச்சனை வராது.
மிதமான சூடு உள்ள தண்ணீரை கொண்டு, தாய்ப்பால் கட்டிக் கொண்டுள்ள இடத்தை மசாஜ் செய்து வந்தாலும் இந்த பிரச்சனை தீரும். இதுமட்டுமின்றி, சூடான தண்ணீரில், கற்றாழை சாற்றை பிழிந்து வைத்துக் கொண்டு, அந்த தண்ணீரை மசாஜ் செய்தால், இந்த பிரச்சனை விரைவில் சரியாகி விடும். கற்றாழை கிடைக்கவில்லை என்றால், சாதாரண தேங்காய் எண்ணெயை மட்டும் பயன்படுத்தி மசாஜ் செய்து வந்தாலும், இந்த பிரச்சனை சரியாகும்.
தாய்ப்பால் கட்டிக் கொள்ளும் பிரச்சனை உள்ளவர்கள், இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை, பச்சை பூண்டை மசித்து சாப்பிட வேண்டும். பச்சை பூண்டு சாப்பிட முடியவில்லை என்றால், தேன் கலந்து சாப்பிட முயற்சி செய்யவும். பூண்டை சாப்பிட்டாலும், அதில் உள்ள சத்துக்கள் தாய்ப்பால் கட்டிக் கொள்வதை சரி செய்யும்.