தலை அரிப்பால் அவதியா..?? உங்களுக்கான டிப்ஸ்..!!

வெயில் காலங்களில் நமக்கு இருக்கக்கூடிய மிக முக்கியமான தலைமுடி பிரச்சினை என்றால் அது தலைமுடியின் வேர்க்கால்களில் ஏற்படும் அரிப்பு தான்.

இந்த பிரச்சினை பெண்களை விடவும் ஆண்களுக்கே அதிகம் இருக்கிறது. இந்த தலைமுடி அரிப்பை இயற்க்கையான பொருட்களை கொண்டு சரி செய்யலாம். எலுமிச்சையில் இயற்கையாகவே ஆன்டி மைக்ரோபியல் தன்மையும் ஆண்டி இன்ஃபிளமேட்டரி தன்மையும் அதிகமாகவே இருக்கிறது.

இது தலைமுடி அரிப்புக்கு மிகச் சிறந்த தீர்வாக அமையும். ஒரு பெரிய எலுமிச்சைப் பழத்தைப் பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள். அதை ஒரு சிறிய காட்டன் பஞ்சியில் தொட்டுக் கொஞ்சம் கொஞ்சமாக தலைமுடியின் வேர்க்கால்களில் ஒத்தி எடுங்கள். 10 முதல் 20 நிமிடங்கள் அப்படியே உலர விட்டுவிட்டு பின்னர் குளிர்ந்த நீரால் அலசுங்கள். வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால். இந்த பிரச்சனை நீங்கும்.

சிறிதளவு தேங்காய் எண்ணெய் எடுத்துக் கொள்ள வேண்டும். அதை லேசாக சூடுசெய்து, வேர்க்கால்களில் தேய்த்து சிறிது நேரம் மசாஜ் செய்துவிட்டு, பின்னர் சில மணிநேரங்கள் ஊறவிட வேண்டும். பிறகு மென்மையான ஷாம்பு கொண்டு தலையை அலசினால் போதும்.

Recent Post

RELATED POST