தண்டுக் கீரையில் செய்யப்படும் அனைத்துவிதமான உணவுகளும் உடலுக்கு வலிமையையும், பொலிவையும் தரத் கூடியவை. சிறுநீரக நோய்களைக் குணப்படுத்தி, சிறுநீரகங்களைப் பாதுகாக்கக்கூடியது. உஷ்ண நோய்களுக்கு நல்ல மருந்து இது. முற்றிய கீரைத் தண்டில் நார்ச் சத்து அதிகமாவ இருப்பதால் மலச்சிக்கல் முற்றிலும் நீங்கும்.
இளமையில் ஏற்படும் முதுமை நிலையைத் தடுப்பதில் இந்தக் கீரை முன்னணியில் உள்ளது. இதில், கால்சியமும் இரும்புச் சத்தும் அதிகமாக உள்ளன. மேலும் புரதம், கொழுப்பு, நார்ச் சத்து, வைட்டமின் சி மற்றும் பி காம்ப்ளக்ஸ், பாஸ்பரஸ் போன்ற சத்துகளும் உள்ளன.
தண்டுக் கீரையுடன் சீரகம், மஞ்சள் இரண்டையும் சேர்த்துக் கஷாயமாகச் செய்து சாப்பிட்டால் உடல் சூடு குறையும். தண்டுக் கீரையுடன் வெந்தயம், சீரகம் சேர்த்து கஷாயமாக செய்து சாப்பிட்டால் மூல நோய்கள் குணமாகும். மூலத்தில் உண்டாகும் பௌத்திரக் கட்டிகளும் மறையும்.
தண்டுக் கீரையுடன் சிறு பருப்பு, பூண்டு இரண்டையும் சேர்த்துச் சாப்பிட்டால் உடல் எரிச்சல் தீரும். சிவப்பு நிற தண்டுக் கீரைக்கு விசேஷ குணம் உண்டு. இந்தக் கீரைத் தண்டுடன், துத்தி இலை சேர்த்து கஷாயமாகச் செய்து சாப்பிட்டால், வெட்டைச்சூடு, வெள்ளைப்படுதல் போன்றவை குணமாகும்.
தண்டுக் கீரையுடன் மிளகையும், மஞ்சளையும் சேர்த்துக் கஷாயமாகச் செய்து சாப்பிட்டால் உடலில் உள்ள கொழுப்பு கரையும். தண்டுக் கீரை, துத்தி இலை, சீரகம் மூன்றையும் சேர்ந்து கஷாயமாக்கிச் சாப்பிட்டால் மூலச்சூடு உள்ளிட்ட மூலம் தொடர்பான அனைத்துப் பிரச்சனைகளும் தீரும்.
தண்டுக் கீரையுடன், சீரகம், மஞ்சள் மற்றும் பார்லியைச் சேர்த்து சுஷாயமாகச் செய்து சாப்பிட்டால் நேபேதி குணமாகும். நீர் எரிச்சல், நீர்க் கடுப்பும் மறையும். சிறுநீர் தராளமாகப் பிரியும்.
தண்டுக் கீரை, மிளகு, மஞ்சள், தேங்காய்ப்பால் ஆகியவற்றைச் சேர்த்துக் கொதிக்கவைத்துச் சாப்பிட் டால் ரத்தம் சுத்தமாகும். உடலில் புது ரத்தம் உற்பத்தி ஆகும். உடல் வலுப்பெறும். படை, சொறி, சிரங்கு போன்ற தோல் நோய்கள் குணமாகும்.
தண்டுக் கீரையுடன் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து சாறு எடுத்து, சாற்றுக்கு சமமாகத் தேன் கலந்து காய்ச்சி இறக்கி தினமும் இரண்டு ஸ்பூன் சாப்பிட்டு வந்தால், கண் நோய்கள் அனைத்தும் குணமாகும்.
தண்டுக் கீரையுடன் உளுந்து, மஞ்சள் இரண்டையும் சேர்த்துக் கஷாயமாகச் செய்து சாப்பிட்டால் நரம்புக் கோளாறுகள் சரியாகும்.