தண்ணீர் விட்டான் கிழங்கு நன்மைகள்

தண்ணீர் விட்டான் கிழங்கு இனிப்பு சுவையை கொண்டது. இது உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். உடலுக்கு பலத்தை தரும். ஆண்மையை அதிகரிக்க செய்யும்.

தண்ணீர் விட்டான் கிழங்கு இந்தியா, இலங்கை, இமயமலை ஆகிய இடங்களில் காணப்படும். சதாவேரி, சதாவரி, நாராயணி, உதகமூலம், சீக்குவை, பறணை, பீருதந்தி என பல பெயர்கள் உள்ளது.

நீரிழிவு

தண்ணீர் விட்டான் கிழங்கில் பால் சேர்த்து அரைத்து அதனை காய வைத்து பொடி செய்து வைத்துக்கொள்ளவேண்டும். அந்த பொடியை தினமும் இருவேளை சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் குணமாகும்.

உடல் சூடு

தண்ணீர் விட்டான் கிழங்கு பொடியை பாலில் கலந்து குடித்து வந்தால் உடல் சூடு குறைந்து உடலுக்கு குளிர்ச்சியைத் தரும்.

காய்ச்சல்

தண்ணீர் விட்டான் கிழங்கு, சுக்கு, மிளகு, திப்பிலி இவைகளை தலா 50 கிராம் அளவு எடுத்து பொடி செய்து தேனில் கலந்து தினமும் இரண்டு கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் அனைத்து விதமான காய்ச்சல்களும் குணமாகும்.

உடல் பலம் பெற

தண்ணீர் விட்டான் கிழங்கை நன்றாக கழுவிய பிறகு மேல் தோலை நீக்கி காயவைத்து பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். அந்த பொடியை இரண்டு கிராம் அளவு எடுத்து பசு நெய்யில் கலந்து தினமும் காலை மாலை சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும்.

ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் கருப்பை சார்ந்த நோய்களுக்கும் தண்ணீர் விட்டான் கிழங்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

Recent Post