கரூர் தான்தோன்றி மலையின் சிறப்புகள்

கரூர் பசுபதிநாதர் ஆலயம் போலவே, கரூருக்கு தெற்கே உள்ள ‘தான்தோன்றிமலை’யும் பிரசித்தி பெற்றது.

இங்குள்ள குகை ஆஞ்சநேயர் சிலையை, பாறையைக் குடைந்து கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் ‘குணசீலன்’ என்ற ஆதியேந்திரன் நிறுவியதாகத் தல வரலாறு கூறுகிறது.

தான் தோன்றி மலையில் பெருமாளுக்கும் தனிக்கோயில் இருக்கிறது. இந்த குடைவரைக் கோயில் 197 அடி நீளமும்.14 ½ அடி அகலம், 9 அடி உயரமும் கொண்டது. கலைநயத்தோடு காட்சி தருகின்றது.

தான்தோன்றிமலை பெருமாள் கோயில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. புரட்டாசி மாதம் திருவோணம் நட்சத்திரத்திலும், மாசி மாதம் மகம் நட்சத்திரத்திலும் இங்கு தேர்த் திருவிழா நடைபெறும். திருவிழாக் காலங்களில் அரசு போக்குவரத்துக் கழகங்கள் சிறப்புப் பேருந்துகளை இயக்குகின்றன.

புரட்டாசித் திங்கள் திருவிழா, 18 நாட்கள் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. புரட்டாசி சனிக்கிழமைகளில் பூஜைகள் மிகச்சிறப்பாக இருக்கும். அதிலும் மூன்றாவது சனிக்கிழமை மிகவும் விசேஷமானது.

தாந்தோன்றிமலை கோயிலில் தினமும் காலை 7 மணி, 8 மணி, பகல் 12 மணி, மாலை 5 மணி என நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றன. உச்சிக் காலத்திற்கு முன்பு எண்ணைக்காப்பு, பால், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம் ஆகியவற்றினால் மூலவருக்கு முழுக்கு நடைபெறும்.

திருமலை நாயக்க மன்னர் இக்கோயிலுக்கு அறக் கொடைகள் வழங்கியுள்ளார். ஆலய கருவறை முழுவதும் மலையைக் குடைந்து அமைந்துள்ளது பெரிதும் வியப்பாக உள்ளது.

Recent Post

RELATED POST