தரைப்பசலைக் கீரையின் நன்மைகள்

தரைப்பசலைக்கீரையில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால், இதனை சாப்பிடுவதன் மூலம் ரத்தசோகையில் இருந்து விடுபடலாம். ரத்த அழுத்தம், இதய நோய், உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் தினமும் உணவில் இதை சேர்த்துக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.

மூளைக்கு சக்தியைக் கொடுக்கும். இலையை வாட்டி தலையில் பற்றுப் போட்டால் தலைவலி குணமாகும்.

இந்தக் கீரையில் கலோரி, கார்போஹைட்ரேட் குறைவாக உள்ளதால் இது உடல் எடையை குறைக்க உதவும். வைட்டமின் A, E மற்றும் K அதிகம் உள்ளதால் சுவாசக்கோளாறு, சிறுநீரகப் பாதை தொற்று போன்றவற்றிலிருந்து பாதுகாக்கும். இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்கும். செரிமான மண்டலம் சீராக செயல்பட உதவும். இதில் உள்ள மக்னீசியம் இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ளும்.

Advertisement

வைட்டமின் K இருப்பதால் எலும்புகளின் அடர்த்தி மற்றும் வலிமையை அதிகரிக்கும், மூட்டு வலி மற்றும் வீக்கத்தை குறைக்கும். இந்தக் கீரையில் போலிக் அமிலம் இருப்பதால் கர்ப்பிணிகள் இதை சாப்பிடலாம். இதனால் பிறக்கும் குழந்தைகள் நல்ல மூளை வளர்ச்சி உடன் இருப்பார்கள். தாய்ப்பால் நன்றாக சுரக்கும். இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.