உலகளந்த பெருமாள் கோவில் வரலாறு

ஊர் – திரு ஊரகம்

மாவட்டம் – காஞ்சிபுரம்

மாநிலம் – தமிழ்நாடு

மூலவர் – உலகளந்த பெருமாள், திருவிக்கிரமப் பெருமாள்

தாயார் – அமுதவல்லி நாச்சியார், ஆரணவல்லி, அம்ருதவல்லி

தீர்த்தம் – நாக தீர்த்தம்

திருவிழா – வைகுண்ட ஏகாதேசி

திறக்கும் நேரம்: காலை 7:00 மணி முதல் 12:00 மணி வரை, மாலை 4:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை.

தல வரலாறு

பெருமாளின் 108 திருப்பதிகளில் இது 51 வது திவ்யதேசம். மகாபலி என்னும் அரசன் அசுர குலத்தை சேர்ந்தவனாக இருந்தாலும் பல நற்குணங்கள் நிரம்பப் பெற்றவன். தான தர்மத்தில் சிறந்தவனாக இருந்த வேளையில் அவனுக்கு கர்வம் ஏற்பட்டது. எனவே அவனது கர்வத்தை அடக்க பெருமாள் வாமன ரூபத்தில் வந்து மூன்றடி மண் கேட்டார்.

வந்திருப்பது மகாவிஷ்ணு என அறிந்து சுக்கிராச்சாரியார் தானத்தை தடுத்தார். கேட்டவர்க்கு இல்லை என்று சொன்னால் இதுவரை செய்த தானம் எல்லாம் வீணாகிவிடும் என்பதால், முறைபடி நிலம் கொடுக்க சம்மதித்தான் மகாபலி.

பெருமாள் விஸ்வரூபம் எடுத்து ஒரு அடியை பூமியிலும், மற்றுமொரு அடியை பாதாளத்திலும் வைத்து மீதமுள்ள ஒரு அடி நிலம் எங்கே என கேட்டார்? மகாபலி கர்வம் மறைந்து, தன் தலையை குனிந்து இதோ என் தலையை தவிர வேறு இடம் இல்லை என்றார்.

பெருமாள் அவனை பூமியில் அழுத்தி பாதாளத்தில் அனுப்பினார். அவன் பாதாள லோகம் வந்து உலகளந்த பெருமாள் காட்சியை காண முடியவில்லை என மனம் வருந்தி கடும் தவம் புரிந்தான்.

அவனது தவத்தில் மகிழ்ந்து இத்தலத்தில் உலகளந்த பெருமாளாக காட்சி கொடுத்தார். இருந்தும் அவனால் பாதாள உலகத்தில் இருந்ததால் முழுமையான வடிவம் காண முடியவில்லை. எனவே இந்த இடத்தில் ஆதிசேஷன் ஆக காட்சி அளித்தார்.

இந்த இடமே திருஊரகம் என அழைக்கப்படுகிறது. இது உலகளந்த பெருமாள் கோயிலின் உள்ள முலஸ்தானத்தின் இடது பக்கத்தில் உள்ளது.

Recent Post

RELATED POST