வைத்தமாநிதி பெருமாள் திருக்கோயில் வரலாறு

ஊர் – திருக்கோளூர்

மாவட்டம் -தூத்துக்குடி

மாநிலம் -தமிழ்நாடு

மூலவர் -வைத்தமாநிதி பெருமாள்

தாயார் -குமுதவல்லி நாயகி , கோளூர் வல்லி நாயகி

தீர்த்தம் -தாமிரபரணி ,குபேர தீர்த்தம்

திருவிழா — வைகுண்ட ஏகாதசி.

திறக்கும் நேரம் -காலை 7:30 மணி முதல் பகல் 12 மணி வரை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை.

பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 86 வது திவ்ய தேசம் ஆகும் .

-தல வரலாறு:

பார்வதியால் குபேரனுக்கு சாபம் உண்டாயிற்று .இதனால் குபேரனிடம் இருந்து நவநிதிகள் விலகிச் சென்றன. இவனிடம் இருந்து விலகிய நவநிதிகள் நாராயணனிடம் சென்றடைந்தது. நாராயணர் இந்த நிதிகளை பாதுகாத்து வைத்திருந்ததால் அவருக்கு வைத்தமாநிதி என்ற திருநாமம் ஏற்பட்டது. பெருமாளே இத்தலத்தில் தனது வலது தோளுக்கு கீழ் நவநிதிகளை பாதுகாத்து வருவதாக ஐதீகம். பெருமாள் நவநிதிகளை பாதுகாத்து வருவதை இன்றும் நாம் தரிசிக்கலாம். இத்தலத்து பெருமானை வழிபட்டு குபேரன் மீண்டும் நவநிதிகள் பெற்றதாக தல புராணங்கள் கூறுகின்றன. இத்தல பெருமாளுக்கு அதர்மபிசுனம் என்ற பெயரும் உண்டு.

நவ திருப்பதியில் இது மூன்றாவது திருப்பதி. நவக்கிரகத்தில் இது செவ்வாய் ஸ்தலமாகும். செவ்வாய் கிரகத்தால் தோஷம் உள்ளவர்கள் இங்கு சென்று வழிபட்டால் தோஷம் நிவர்த்தியாகும். இத்தலத்து விமானம் ஸ்ரீகர விமானம்.சோழநாட்டில் அமைந்துள்ள நவகிரக தலங்களுக்கு ஒப்பாக இப் பாண்டிநாட்டு நவதிருப்பதிகள் நவகிரக தலங்களாக போற்றப்படுகிறது. நவதிருப்பதிகள் என்றழைக்கப்படும் ஒன்பது வைணவ தலங்களில் உள்ள பெருமாளை நவ கிரகங்களாக கருதப்பட்டு வழிபடப்படுகிறது.

Recent Post