திருமணம் ஆகாத பலருக்கு திருமணம் நடப்பது போல கனவு வரும். இது போன்ற கனவுகள் வருவது நல்லதா என்பதை பார்ப்போம்.
திருமணம் செய்து கொள்வது போல் கனவு வந்தால் உங்கள் வாழ்க்கையில் வரப்போகும் சவால்களை குறிக்கிறது. ஏற்கனவே திருமணம் ஆனவர்களுக்கு திருமணம் நடப்பது போல கனவு வந்தால் உங்களது திருமண வாழ்க்கையில் பிரச்சனை நடக்கும்.
உங்கள் கனவில் திருமண ஊர்வலத்தை கண்டால், அது புனிதமானதாக கருதப்படுகிறது. உங்கள் எதிர்காலம் விரைவில் பொன்னாக போகிறது என்று அர்த்தம்.
நீங்கள் திருமண உடையில் நின்று கொண்டிருப்பதை போல் கண்டால், அதுவும் மங்களகரமானதாகவே கருதப்படுகிறது. இதன் மூலம் உங்களது திருமண வாழ்வில் மகிழ்ச்சி அடைவீர்கள்.
நீங்கள் திருமண அழைப்பிதழைப் பெறுவது போல் கனவு வந்தால், உங்களைச் சுற்றியுள்ளவர்களுடன் நீங்கள் நல்ல உறவைக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
உங்கள் வீட்டில் திருமண ஏற்பாடு நடப்பது போல கனவு கண்டால், உங்கள் வாழ்க்கையில் புதிய மாற்றமும், அமைதியும் வரப்போகிறது என்று அர்த்தம்.