திருமண தடை நீக்கும் திருமணஞ்சேரி தல வரலாறு

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்பது பொன்மொழி. ஆனால் இது எல்லோருக்கும் பொருந்துவதில்லை. சிலருக்கு குறிப்பாகப் பெண்களுக்கு திருமணம் நடக்காமல் தள்ளிக்கொண்டு போகும்.

செவ்வாய் தோஷம், பொருளாதார சிக்கல், பொருத்தமான துணை அமையாமை என்று பல காரணங்களால் சிலருக்கு திருமணம் உரிய காலத்தில் நடப்பதில்லை. இப்படித் திருமணம் தடைபட்டவர்கள் திருமணஞ்சேரி கோயிலுக்கு வந்து வழிபட்டால், விரைவில் திருமணம் நடைபெற்று கணவன் – மனைவியாக இதே கோயிலுக்கு மீண்டும் வருகிறார்கள் என்பது பலரது அனுபவத்தில் கண்ட உண்மை. அதனால் இந்த ஊர் ‘திருமணஞ்சேரி’ என்று அழைக்கப்படுகிறது.

அப்பர் மற்றும் திருஞானசம்பந்தர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும்.

கோயிலின் வலப்புறம் விநாயகர் சன்னதி உள்ளது. இடப்புறம் நடராஜர் சன்னதியும் அம்மன் சன்னதியும் உள்ளன.

நாகை மாவட்டம், மயிலாடுதுறை வட்டத்தில் குத்தாலம் நகரிலிருந்து 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருமணஞ்சேரி. இங்கு சிவபெருமான் கல்யாண சுந்தரமூர்த்தியாக எழுந்தருளி, பார்வதி தேவியை திருமணம் செய்து கொண்டார். இதனாலும் இந்த ஊர் ‘திருமணஞ்சேரி’ என்று அழைக்கப்படுகிறது.

சிவனுக்கும் பார்வதிக்கும் கயிலையில் அல்லவா திருமணம் நடந்தது. இங்கு எப்படித் திருமணம் நடந்தது என்று கேட்கத் தோன்றுகிறது அல்லவா! அதற்கும் புராணக்கதை உள்ளது.

தல வரலாறு

பார்வதிதேவி கயிலை மலையில் சிவபெருமானிடம் ஒரு நாள், மீண்டும் ஒருமுறை தங்களை மணந்து இன்புற வேண்டுகிறேன். அருள் புரிவார் என்று வேண்டினான். அதற்கு சிவபெருமான்,”வரும் ‘பிரும்ம கற்பத்தில் உன்னை மீண்டும் மணம் புரிவேன்” என்று சொன்னார்.

தனது ஆசை நிறைவேற வெகுகாலம் தள்ளி சிவபெருமான் நாள் குறித்திருப்பதைக் கேட்டு வருத்தம் கொண்டாள் பார்வதி. அதனால் சிவபெருமானிடம் அலட்சியமாக நடந்தாள். இதுகண்டு கடுங்கோபம் கொண்ட சிவன், பார்வதி தேவியை பசுவாக உருமாற்றி பூலோகத்திற்கு அனுப்பி வைத்தார்.

தனது தவறை உணர்ந்து மனம் வருந்திய பார்வதிதேவி சாபவிமோசனம் கேட்டு சிவனிடம் மன்றாடினாள். கோபம் தனித்த சிவன், திருமகள், கலைமகள், இந்திரா ஆகியோரையும் பசுவாக மாற்றி பார்வதி தேவியுடன் உலா வரச்செய்தார். திருமால், பசு மேய்ப்பவராக உருவம் கொண்டு அந்தப் படங்களை பராமரித்து வந்தார்.

பசு உருவம் கொண்டிருந்த பார்வதிதேவி, நாளும் பால் பொழிந்து சிவனை வணங்கினால். மேனி குளிரப்பெற்ற சிவபெருமான் திருமணஞ்சேரியில் பார்வதியை மீண்டும் திருமணம் செய்து கொண்டார். இதுவே இக்கோயிலின் தலவரலாறு ஆகும்.

இக்கோயிலில் அர்ச்சனை செய்து வழிபடுகிறவர்களுக்கு தடை நீங்கி திருமணம் நடைபெறும். திருமணஞ்சேரி கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இறைவன், கல்யாணசுந்தரர் இறைவி, கோகிலாம் பாலள். இருவரும் (சிவன், அம்பாள் கையைப் பற்றி மணக்கோலத்தில் காட்சியளிக்கிறார்கள்.

திருமணம் கைகூடாது தடைபட்டு நிற்பவர்கள் கல்யாணசுந்தரருக்கு மாலை சாற்றி அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். ராகு-கேது தோஷம் இருப்பவர்கள் ஞாயிற்றுக்கிழமையும், செவ்வாய் தோஷம் உள்ளவர் செவ்வாய்க் கிழமையும் இங்கு வரவேண்டும். நாக தோஷத்தால் குழந்தை பேறு இல்லாத தம்பதியர் ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் இங்கு வரவேண்டும். ஏழு கடல் தீர்த்தத்தில் நீராடி, ராகு பகவானுக்கு முழுக்கு நடத்தி பால் பொங்கல் படைக்க வேண்டும். நாக தோஷம் நீங்கி பிள்ளைப் பேறு கிட்டும் என்று பக்தர்கள் சொல்கிறார்கள்.

அப்பர், சம்பந்தரால் பாடப் பெற்றது இக்கோயில் சோழ அரசி செம்பியன்மாதேவியால் திருப்பணி செய்யப்பட்ட விவரம் கல்வெட்டுகள் வழி அறியப்படுகிறது

மயிலாடுதுறை – கும்பகோணம் வழித்தடத்தில் உள்ள குத்தாலத்திலிருந்து 6 கி.மீ. தூரத்தில் இந்த கோவில் உள்ளது.

Recent Post