லெட்சுமணப் பெருமாள் கோவில் வரலாறு

ஊர் – திருமூழிக்களம்

மாவட்டம் -எர்ணாகுளம்

மாநிலம் -கேரளா

மூலவர் – லெட்சுமணப் பெருமாள்

தாயார் -மதுரவேணி நாச்சியார்

தீர்த்தம் -சங்க தீர்த்தம், சிற்றாறு

திருவிழா -சித்திரை மாதம் திருவோண நட்சத்திரத்தில் ஆறாட்டு. சித்திரை திருவோணத்தைத் தவிர அனைத்து திருவோணத்திற்கும் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் உண்டு.

திறக்கும் நேரம் -காலை 5 மணி முதல் பகல் 11 மணி வரை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை

தல வரலாறு ;

பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் இது 69 வது திவ்ய தேசம் ஆகும். கிருஷ்ண பகவான் துவாரகையில் ராமன், லட்சுமணன், பரதன், சத்ருக்னன் என்ற நான்கு விக்கிரகங்களை பூஜித்து வந்த போது, இப்பகுதி தண்ணீரில் மூழ்கிய வேலையில் வாக்கேல் கைமல் முனிவர் என்பவரிடம் இந்த விக்ரகங்கள் கிடைத்தது.

அப்போது இவரது கனவில் கிருஷ்ணர் தோன்றி இந்த விக்கிரகங்களை பாரதப்புழா ஆற்றின் கரையோர தலங்களில் பிரதிஷ்டை செய்யும் படி கூறினார். அப்படி பிரதிஷ்டை செய்த தலங்கள் தான் திருச்சூர் மாவட்டம் திருப்பறையார் ராமர் கோயிலாகவும், இரிஞ்சாலக்குடாவில் பரதன் கோவிலாகவும், பாயமல்லில் சத்ருக்கன் கோயிலாகவும், எர்ணாகுளம் மாவட்டம் திருமூழிக்களத்தில் லெட்சுமண பெருமாள் கோயிலாகவும் அமைந்துள்ளது.

கேரளாவில் லட்சுமண பெருமாள் என்ற திருநாமம் இத்தலத்தில் உள்ள பெருமாளுக்கு மட்டும்தான் உள்ளது. இத்தலத்திற்கு மற்றொரு வரலாறும் உள்ளது. ஹரித மகரிஷி என்பவர் இங்கு பெருமாளை நோக்கித் தவமிருந்தார். இவரது தவத்தை மெச்சி நீ வேண்டும் வரம் கேள் என்றார், அதற்கு மகரிஷி ‘’பகவான்! இந்த உலக மக்கள் அனைவரும் எந்தவிதத் துன்பமும் இன்றி உன்னை வந்து அடைவதற்கு எளிய வழிமுறையை கூறுங்கள் என்றார்.

மக்கள் அவரவர் செய்து கொண்டிருக்கும் தொழிலுக்கு ஏற்ப எளிதில் என்னை அடைவதற்கு கடைபிடிக்க வேண்டிய பூஜை முறைகளை போதிக்கும் “ஸ்ரீ ஸுக்தியை’ இத்தலத்தில் உங்களுக்கு வழங்குகிறேன்’ என்றார். எனவே தான் இத்தலம் திருமொழிக்களத்தான் என்றழைக்கப்படுகிறது.

Recent Post